சினிமா கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் வருடா வருடம் விருதுகள் வழங்குவது வழக்கம் .அதே போல் 2019 ஆம் ஆண்டிற்கான விருது நிகழ்சிகளை பிரபல நிறுவனம் அண்மையில் நடித்தி உள்ளது.அதில் எந்த படம் மற்றும் நடிகர்கள் விருதுகளை பெற்றுள்ளது என்பதை கீழே பார்போம் .

சிறந்த படத்திற்கான விருது பேரன்பு படத்திற்கு கிடைத்துள்ளது.இந்த படத்தை இயக்கியவர் டைரக்டர் ராம் அவர்கள் அதாவது இந்த படம் ஒரு அப்பா தனது நோயால் பாதிக்க பட்ட பிள்ளையை வளர்க்கும்போது நிகழும் கஷ்டங்கள் பற்றிய படம் தான் பேரன்பு படம்.

சிறந்த இயக்குனற்கான விருது அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறன் பெற்றுள்ளார். தனுஷ் மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சிறந்த நடிகர் விருது அசுரன் படத்தில் ஹீரோவாக நடித்த தனுஷ் பெற்றுள்ளார் .தனது நடிப்பு திறைமையை வைத்து ரசிகர்களிடையே பெரும் மதிப்பை பெற்றவர் தனுஷ் அவர்கள்.அசுரன் படத்தில் வயதான கேரக்டர்-இல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகை விருது கேம் ஓவர் படத்தில் நடித்த டாப்ஸி அவர்களுக்கு கிடைத்துள்ளது.தமிழ் படங்களில் நடித்து வந்த டாப்ஸி படங்கள் எதுவும் கிடைக்காமல் போயிருந்த நேரத்தில் தமிழில் ரீ-என்ட்ரி குடுக்கும் வகையில் நடித்த படம் கேம் ஓவர் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சிறந்த இசையமைப்பாளர் விருது யுவன் ஷங்கர் ராஜா அவர்களுக்கு கிடைத்துள்ளது.இவருக்கு பேரன்பு மற்றும் சூப்பர் டீலக்ஸ் படங்களின் இசைக்கு விருது கிடைத்துள்ளது .படத்திற்கு முக்கிய அங்கமாய் வகிக்கும் இசையை மிக அழகாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் திறமை யுவன் அவர்களிடம் மட்டுமே உள்ளது.இவரது இசைக்கு மயங்காத இரசிகர்களே கிடையாது.

சிறந்த வில்லனுக்கான விருது சாம்பியன் படத்தில் நடித்த சிவா அவர்களுக்கு கிடைத்துள்ளது .சாம்பியன் படத்தை சுசீந்தரன் இயக்கியுள்ளார்.

சிறந்த வில்லிக்கான விருது இருட்டு படத்தில் நடித்த சாய் தன்ஷிகா அவர்களுக்கு கிடைத்துள்ளது.இந்த படத்தை துரை அவர்கள் இயக்கியுள்ளார்.

சிறந்த குணச்சித்திர நடிகர் மற்றும் நடிகைக்காண விருது ஜார்ஜ் மரியான், கைதி படத்திற்காகவும் மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன், சூப்பர் டீலக்ஸ் படத்திற்காகவும் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here