தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் திரைப்படங்களில் ஒன்று தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ படம் தான் எனலாம் . இந்நிலையில் இந்த படம் திரையில் வெளியாவதற்கு முன்னரே உலகளவில் பல சாதனைகளை படைத்தது மேலும் வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது . இவ்வாறு இருக்கையில் தளபதி விஜய்
அவர்கள் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படமாக தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தை பிரபல முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க உள்ளார்கள் . இந்நிலையில் இந்த படத்தின் படபூஜை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறப்பான முறையில் நடந்த நிலையில் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா , சினேகா,
லைலா, மைக் மோகன், மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் என பல முன்னணி திரை பிரபலங்கள் நடிக்க இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி வருகிறது . இது ஒரு பக்கம் இருக்க மேலும் ஒரு அப்டேட் தற்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது அந்த வகையில் தளபதி 68 படத்தில்
விஜய்க்கு தங்கையாக பிரபல இளம் நடிகை இவனா நடிக்க இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இருப்பினும் இது குறித்த எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் இன்னும் வெளியாகத நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது………………….