” கர்ப்பமாக இருக்கும்போதும் ரவி இப்படி பண்ணுவாரு ” சர்ச்சையை கிளப்பிய ஜெயம் ரவி மனைவி …….. வெளியான வீடியோ ……

159

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான ஜெயம் படத்தில் ஹீரோவாக நடித்து திரையுலகில் தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் ஜெயம் ரவி . இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து இன்றைக்கு தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கூட இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம்

வெளியாகி உலகளவில் வேற லெவலில் பிரபலத்தை ஏற்படுத்தி இருந்தது. இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜெயம் ரவி . மேலும் இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது கணவருடன் ஆர்த்தி கலந்து கொண்ட நிலையில் அதில் பேசியபோது, சொன்னால் எனது முதல் மகன் பிறக்கும் போது ரவி ஊரிலேயே இல்லை அவரும்

இங்க இருக்க வேண்டும் என நினைத்தார் ஆனாலும் எனது பிரசவம் சீக்கிரம் நடந்து விட்டது. எனக்கும் தெரியும் அந்த தொழில் அப்படி இருந்தும் நான் கர்ப்பமாக இருக்கும் போது உடல்நிலை சரியில்லாத நிலையில் அவர் என்னை நன்றாக பார்த்து கொண்டார். அதோடு நான் வாந்தி  எடுக்கும் போது அதை கையிலேயே பிடித்து கொள்வார் இது போன்று நிறைய விஷயங்களை செய்துள்ளார் . 3,4 மணிக்கு எல்லாம் நான் எதையாவது

சாப்பிட வேண்டும் என சொன்னால் உடனே அவர் அதை எழுந்து தருவார் மேலும் ஐந்து மணிக்கு தூங்கி எழுந்து சூட்டிங் போவார் . இந்நிலையில் கணவராக நூறுக்கு அதிகமான மார்க் கொடுப்பேன் ஒரு கணவனாக ஜெயம் ரவி மாதிரி எல்லோருக்கும் வேண்டும் என நான் ஆசை படுகிறேன் என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……………………

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here