தென்னிந்திய சினிமாவில் சமீபத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு பல இளசுகளின் கனவு கன்னியாக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வருவதோடு பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்.
இவ்வாறு இருக்கையில் அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகவுள்ள அனிமல் படத்தின் டீசர் வெளியாகி திரையுலகினர் மற்றும் மக்கள் மத்தியில் செம வைரளாகி இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் ராஷ்மிகா குறித்த அசிங்கமான வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது அந்த வகையில் சமீபகாலமாக பல முன்னணி நடிகைகளை இழிவுபடுத்தும் வகையில் டீப்பேக் எனும்
தொழில் நுட்ப முறையில் வேறொரு நடிகையின் உடலில் முகத்தை வைத்து அவர்களை இழிவாக சித்தரித்து வருகின்றனர் . இப்படி இருக்கையில் இதே போன்று ராஷ்மிகா மந்தனாவை அசிங்கபடுத்தும் நோக்கில் யாரோ இது போன்று வீடியோ எடுத்து வெளியிட்டு அதனை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர் . இதனைதொடர்ந்து இந்த வீடியோவை பார்த்த
பலரும் முகம் சுளித்து வருவதோடு இது குறித்து பலத்த கண்டனங்களை தெரிவித்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர் மேலும் இதற்கு பல முன்னணி திரை பிரபலங்கள் பலரும் கூட கண்டித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது…………………………..
This is how Deepfake videos are being created.
No one can differentiate between Rashmika Mandana and the original video of Zara Patel, a British-Indian girl on Instagram.#RashmikaMandanna #deepfakevideo#zarapatel pic.twitter.com/O6OBWfXOrF— Sandeep Nirvan (@Sandeepnirvan_) November 6, 2023