தற்போது சினிமாவில் பல இளம் நடிகைகளும் ஹீரோயினாக அறிமுகமாகி படங்களில் நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்னர் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்ற திரைப்படம் சீதாராமம் .
இந்த படத்தில் ஹீரோவாக துல்கர் சல்மான் நடித்திருந்த நிலையில் ஹீரோயினாக இளம் நடிகையான மிருணாள் தாகூர் . இந்நிலையில் இந்த படத்தில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் வேற லெவலில் பிரபலத்தை எட்டியிருந்த நிலையில் அண்மையில் நடந்த பிரபல விருது வழங்கும் விழாவில் இவருக்கு சிறந்த நடிகைக்கான விருதை பிரபல முன்னணி தெலுங்கு நடிகர் அல்லு அரவிந்த் வழங்கிருந்தார் . இதையடுத்து
பேசியிருந்த அல்லு அரவிந்த், சீக்கிரம் தெலுங்கு மணமகனை பார்த்து திருமணம் செய்து கொண்டு ஹைதாரபாத்தில் செட்டில் ஆகவேண்டும் என கூறியிருந்தார் . இந்நிலையில் மிருணாள் தாகூர் தெலுங்கு நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரை தான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி செம பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த தகவலை அறிந்த மிருணாள் தாகூர் நான் தெலுங்கு நடிகர் யாரையும் காதலிக்கவில்லை திருமணம் செய்ய போவதும் இல்லை அல்லு அரவிந்த் அந்த விழாவில் விளையாட்டாக பேசியுள்ளார் என கருத்து தெரிவித்து உள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது…………………