மக்கள் மத்தியில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் அதிகளவில் பிரபலமாக இருக்கும் நிலையில் அதிலும் விஜய் டிவியில் வெளியாகும் தொடர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம் . இந்நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இல்லத்தரசிகளை கடந்து இளைஞர்கள் பலரையும் கவர
காரணமாக இருந்தது இந்த தொடரில் வரும் முல்லை மற்றும் கதிர் கேரக்டர் தான் . இதையடுத்து இதில் முல்லை கதாபாத்திரத்தில் சமீபத்தில் நடித்து வந்தது சீரியல் நடிகை லாவண்யா இவர் இதற்கு முன்னரே பல தொடர்களில் நடித்திருந்த நிலையிலும் இவருக்கு பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னமோ இந்த சீரியல் தான் எனலாம் . இவ்வாறு இருக்கையில் இந்த சீரியல் கடந்த வாரம் முடிந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய லாவண்யா, காஸ்டிங்
இயக்குனர் ஒருவர் எனக்கு தொடர்பு கொண்டு அவருடன் கண்டக்டில் இருக்க சொன்னார் அதோடு ஆறு மாதம் நாம் இருவரும் ஒன்றாக வாழ்வோம் அதுக்கு மேல வேண்டாம் . இதுக்கு ஒகே சொல்லி நீ என்கூட இருந்தா பெரிய லெவலுக்கு போய்டுவ , இது மாதிரி மூணு பெண்கள் என்கூட அப்படித்தான் இருந்தாங்க இப்ப வேற லெவலுக்கு போய்ட்டாங்க என கூறினார் . இதையெல்லாம் கேட்டு நான் ஏதும்
பேசாமல் அமைதியாக இருந்துவிட்டேன் காரணம் அப்போது தான் நான் வளர்ந்து வரும் காலகட்டம் அதான் அவரை முறைத்து கொள்ள வேண்டாம் என அப்படியே இருந்து விட்டேன் என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………….