பொதுவாக மக்கள் இடையே சினிமாவில் வெளிவரும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் வெளிவரும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் அதிகளவில் விரும்பி பார்க்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி தமிழில் ஏழாவது சீசன் வெற்றிகரமாக
ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதேபோல் பிக்பாஸ் மற்ற மொழிகளிலும் பல சீசன்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் பாலிவுட்டில் ஹிந்தியில் பிக்பாஸ் 17 சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசனில் போட்டியாளராக நடிகை அங்கிதா லோகண்டே மற்றும் அவரது கணவர் பிரபல முன்னணி தொழிலதிபர் விக்கி ஜெயின் இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் அங்கிதா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காலமான தோணி பட பிரபல நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பக்கம் இருக்க அங்கிதா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது தனக்கு பிரேகனன்சி பரிசோதனை செய்த நிலையில் அதற்கான முடிவு வரும் வரை காத்திருப்பதாக
கூறியிருந்தார். இதற்கிடையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து தான் உடனடியாக வெளியேற போவதாக கூறியதை அடுத்து அவர் கர்ப்பமாக இருக்ககூடும் என்பது போலன பல கருத்துகள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது………………..