பொதுவாக சினிமாவில் நடிப்பவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிலையில் இவர்கள் குறித்த எந்த தகவல்கள் வெளியானாலும் அது வேற லெவலில் டிரென்ட் ஆகி விடும். அந்த வகையில் சமீபத்தில் முன்னணி பிரபலம் ஒருவரது சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் மத்தியில்
அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதில் பிரபல நடிகர் அப்பாஸ் உடன் நெருக்கமாக இருக்கும் அந்த சிறுவன் யாரென தெரியுமா …? திரையுலக பயணத்தில் தனது முதல் படமே தளபதி விஜய் உடன் இணைந்து நடித்து தனது நடிப்பால் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது மட்டுமின்றி பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடித்து இன்றைக்கு
சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் பிரபல முன்னணி நடிகர் ஜெய் தான் அது. இவரது நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளிவந்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றதை அடுத்து ஜெய் தற்போது லேபிள் எனும் வெப் சீரியஷில் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் அந்த வெப் சீரியஸ் ஹாட் ஸ்டாரில்
வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ஜெய் தனது சிறுவயதில் அப்பாஸ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் நம்ம ஜெய்யா இது என வாயடைத்து போனதோடு செம வைராலாக்கி வருகின்றனர்………………