கண்டுகொள்ளாத திரையுலகம்! 80 களின் பிரபல நடிகை சுஜாதாவிற்கு இப்படி ஒரு முடிவா? – கண்ணீரை வரவழைக்கும் காரணம்!

980

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை பல முன்னணி நடிகைகள் சிறிதுகாலம் சினிமாவில் நடித்து விட்டு பின்னர் வாய்ப்பில்லாமல் திருமணம் செய்து குடும்ப வாழ்கையில் இறங்கிவிடுவார்கள். முன்னணி நடிகையாக பல ஆண்டுகள் சிறப்பாக வலம் வருபவர்கள் ஒரு சில நடிகைகளே அப்படி தமிழ் சினிமாவில் வெற்றிபெற்று முன்னணி கதாபாத்திரங்கள் கிடைப்பது அப்படி ஒன்றும் எளிதல்ல. அதற்காக கடுமையான உழைப்பும் நல்ல நடிப்பினையும் வெளிப்படுத்த வேண்டும். அந்த வாய்ப்புகளெல்லாம் இன்றுவரை ஒரு சில நடிகைகளுக்கே கிடைக்கின்றன.

இப்படி தமிழ் சினிமாவில் 80கலீல் பல வேறுபட்ட கதாபதிரங்களிலும் முக்கிய வேண்டங்களிலும் நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகை சுஜாதா, இவர் அபோது எந்த கதாபத்திரம் கொடுத்தாலும் சக்கைபோடு போடுவார். இவர் இலங்கையில் பிறந்தவர், ஆரம்பத்தில் இவருக்கு சினிமா துறையின் மீது ஆர்வம் இல்லாமல் இருந்த இவருக்கு பின்னர் தானாகவே வாய்ப்புகள் தேடிவந்தது. முகமோ அப்படியே தமிழ் பெண்ணின் முகம் அதனாலோ என்னவோ பல குடும்ப படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இவர் முதன் முதலில் தபஷ்வினி என்ற மலையாள படத்தின் மூலம் சிமிமா துறைக்கு அறிமுகமாகி இருந்தார். இவரது நடிப்பினை பார்த்து வியந்த கே பாலச்சந்தர் அவர்கள் இவரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகபடுத்தினார். இவரது நடிப்பினை பார்த்து வியந்துபோன இயக்குனர் பாலச்சந்தர் அவர்கள் அவள் ஒரு தொடர்கதை படத்தினை இவரை வைத்து இயக்கியிருந்தார்.

இவர் இணைந்து நடிக்காத முன்னணி நடிகர்களே கிடையாது அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தற்போது வரை முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் வரை இவர் இணைந்து நடித்திருந்தார். பின்னர் தொன்னோருகளின் இறுதியில் பெரும்பாலும் அம்மா வேடத்தில் மட்டுமே நடித்து புகழ் பெற்றார். இவர் இறுதியாக நடித்திருந்த திரைப்படம் அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த வரலாறு.

பின்னர் உடல் நல குறைவின் காரணமாக 2011 ஆம் ஆண்டு இந்த உலகை விட்டு பிரிந்தார்.அப்போது இவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பெரும்பாலான திரையுலக பிரபலங்கள் வரவில்லை. இவர் உயிரோடு இருக்கும்போது நெருக்கமாக இருந்த நடிகர் நடிகைகள்கூட வரவில்லை ஏனென்றால் அப்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கொண்டிருந்தது. இவ்வளவு காலம் தமிழ் சினிமாவில் கொடிகட்டிபறந்த நடிகைக்கே இந்த நிலையென ரசிகர்கள் கண்ணீர் விட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here