தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை ஒரு திரைப்படம் நமக்கு காட்டபடுவது என்னமோ மூன்று மணிநேரம் தான். ஆனால் அது பல மணிநேர படமாக எடுக்கப்பட்டு பின் அதை கதைக்கேற்ப தேவையான காட்சிகளை மட்டும் வைத்து கொண்டு மற்ற காட்சிகளை தூக்கி விடுவார்கள். இந்த வகையில் அதில் தூக்கப்படும் காட்சிகளில் நடிக்கும் பல நடிகர்களின் நடிப்பு தெரியாமலே போய்  விடுகிறது.அந்த வகையில் 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி இளைநர்கள் மனதை கொள்ளை கொண்ட காதல் திரைப்படம் 96. இந்த திரைபடத்தின் காதல் காட்சிகளுக்கு ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது.

இதில் ராம் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதியின் சகோதரியாக சரண்யா ரவிச்சந்திரன் என்பவர் நடித்திருந்தார் ஆனால் அந்த காட்சிகள் படங்களில் வரவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் நடித்தது கூறித்து தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருந்தார் சரண்யா. 26-வயதான சரண்யா தீரன் தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக தன் பயணத்தை தொடங்கினார்.அதன் பின் பல்வேறு குறும்படங்களில் நடித்துள்ள சரண்யா விஜய் சேதுபதியின் காதலும் கடந்து போகும் திரைபடத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து இறைவி, ரெக்க, மேயாத மான், வேலைக்காரன், வடசென்னை போன்ற பல படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் 96-படத்தில் இவர் நடித்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது. இதை பார்த்த சரண்யா இந்த சமயத்தில் நான் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறியிருந்தார். படங்களில் நடிப்பதற்கு நிறம் ஒரு தடை இல்லை என்பதற்கு சரண்யா ஒரு எடுத்துகாட்டு.அந்த வகையில் சரண்யா 90-க்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி சில காரணங்களால் பாதியில் நின்ற வர்மா எனும் திரைபடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் அந்த படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து பாலா அவர்கள் பாராட்டியதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். சமூக வலைதளங்களில்  எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சரண்யா சமீபத்தில் போட்டோ சூட் ஒன்றை நடத்தி அதில் தனது மாடர்னான புகைபடங்களை பதிவிட்டு வருகிறார். மேலும்  தற்போது ஆட்டோ சங்கர், கண்ணாம்பூச்சி, வல்லமை தாராயோ போன்ற வெப் சிரியசுகளில் நடித்து வரும் சரண்யாவை கூடிய விரைவில் வெள்ளித்திரையில் நல்ல கதாபாத்திரத்தில் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here