பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசன் தொடங்கிய முதல் நாளில் இருந்தே துளியும் பஞ்சமில்லாமல் சண்டைகளும் வாக்குவாதங்களும் தொடர்ந்து கிளம்பி வருகிறது எனலாம் . இந்நிலையில் முதல் வார எவிக்சனில் குறைவான வாக்குகளை பெற்று அனன்யா வெளியேறிய நிலையில் அந்த வாரமே பாவா செல்லதுரையும் பிக்பாஸ வீட்டை விட்டு
வெளியேறி விட்டார் . இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் இன்னமும் சண்டைகளும் சச்சரவுகளும் குறையாமல் போய் கொண்டுதான் இருக்கிறது எனலாம் . இது ஒரு பக்கம் இருக்க வழக்கம் போல எல்லா சீசன்களிலும் பிக்பாசில் காதல் ஜோடிகள் தோன்ற ஆரம்பித்து விடுவார்கள் இது முதல் சீசனில் தொடர்ந்து வரும் நிலையில் இந்த சீசனில் அந்த காதல் ஜோடி யாராக இருக்கக்கூடும் என பலரும் ஆவலுடன்
எதிர்பார்த்து வரும் நிலையில் அதற்கு பதில் கொடுக்கும் விதமாக இந்த சீசன் பிக்பாஸ் காதல் ஜோடி உருவாகியுள்ளார் . அது வேறு யாருமில்லை நடன இயக்குனர் மணி மற்றும் சீரியல் நடிகை ரவீனா தான் . இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே நெருக்கமாக இருந்து வரும் நிலையில் சக போட்டியாளரான விசித்ரா இவர்கள் இருவரிடமும் பேசிகொண்டிருக்கும்
போது, நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்க தானா என கேட்க அதற்கு பதில் கொடுத்த ரவீனா நாங்க நல்ல நண்பர்கள் மட்டும் தான் என கூற உடனே மணி நீங்க விட்ட பேசியே வரவச்சிடுவீங்க போல கூறியதை அடுத்து ரவீனா மணியின் கன்னத்தில் செல்லமாக தட்டியுள்ளார் . இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……………..
#Vichitra audience mindla irukiradha opena kettutaanga #Biggbosstamil7 pic.twitter.com/QTJNxLuuo6
— Aadhik Sri (@aadhik_vet09) October 11, 2023