பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேப்டன் மில்லர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை படைத்திருந்தது. இதையடுத்து தனுஷ் அவர்கள் அடுத்தடுத்து பல
படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் அடுத்த படமாக தனுஷ் 51 எனும் படத்தை நடிக்க கமிட்டாகியுள்ளார் அந்த வகையில் இந்த படத்தை தெலுங்கு முன்னனி இயக்குனர்களில் ஒருவரான சேகர் கம்முளா இயக்கும் நிலையில் இவர் இதற்கு முன்னர் தெலுங்கில் பிடா, லவ் ஸ்டோரி போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் நிலையில் முக்கிய கதாபத்திரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா நடித்துள்ளதை அடுத்து ஜிம் ஷார்ப் நடித்துள்ளார் இதனைதொடர்ந்து இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் படம் வெளியாக இருக்கும்
நிலையில் இந்த படத்தின் படபிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது ஒரு பக்கம் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பிரபல நிறுவனமான ட்ரீம் என்டேர்டைன்மென்ட் பெரிதளவிலான தொகைக்கு வாங்கியுள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………………..