ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் என்றாலே தெரியாதவர் யாரும் இல்லை.இவர் தனது 55 வது வயதில் இப்படி படம் நடிக்கிறார் என்று ரசிகர்கள் ஆச்சிரியத்துடன் பார்த்து வருகின்றன.இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு,கன்னடம் மலையாளம் போன்ற பல சினிமா துறைகளில் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி பல லட்ச கணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.அர்ஜுன் அவர்கள் ஹீரோவாக நடிக்கும் காலத்தில் இவர் சினிமா வின் உச்சத்தில் இருந்தவர்.

முதல்வன் மற்றும் ஜெண்டில் மேன் படம் தமிழில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்களை பெற்று தந்தது.இவர் தற்பொழுது தமிழ் சினிமா மட்டுமல்லமல் பல்வேறு சினிமா துறைகளில் படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோல்களில் மட்டும் நடித்து வருகிறார்.

இவர் வில்லன் மற்றும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் தற்போது 16ஆம் நூற்றாண்டில் கடற்படை தளபதியாக இருந்த குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் நடிக்க உள்ளார்.அந்த படம் பல பிரபல முன்னணி நடிகர்கள் நடிக்கயுள்ளார்கள்.

அந்த படத்தில் மோகன் லால், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்கள்.அந்த படத்தின் பட்ஜெட் 100கோடி செலவில் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.அந்த படத்தில் அர்ஜுன் அவர்களுக்கு உண்டான தோற்றத்தை பற்றிய போஸ்டர் ரிலீஸ் ஆகி உள்ளது.அதை கண்ட ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here