தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாள சினிமா துறையில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அணில் முரளி.இவர் மலையாளத்தில் தனது முதல் படமான கன்னியாகுமரியில் ஒரு கவிதா என்னும் படம் மூலம் அறிமுகமாகி அந்த மொழி சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.மேலும் அதன் மூலம் இவருக்கு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
நடிகர் அணில் முரளி அவர்கள் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவர் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் நடிகர் அணில் அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான ஆறு மூலம் களம் இறங்கி பிறகு தொண்டன், நிமிர்ந்து நில், வால்ட்டர், தனி ஒருவன் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் வில்லனாக தனது நடிப்பை வெளிகாட்டியுள்ளார்.
இவர் வெள்ளித்திரையில் மட்டும் கலக்கி வரமல் சின்னத்திரையிலும் தனது கால் தடத்தை பதித்து பல வெற்றி சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகர் அணில் முரளி அவர்களுக்கு ஏற்கனவே கல்லீரல் கோளறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் பிரச்சனை அதிகமானதால் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிகக்கப்ட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவரது உயிர் பிரிந்தது.மேலும் இந்த செய்தியை அறிந்த சினிமா பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.மேலும் இவரது மறைவிற்கு நடிகர் மமூட்டி மற்றும் பல முன்னணி நடிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
Rest in peace Anil Etta. #AnilMurali 🙏 pic.twitter.com/nbCiPr09bD
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) July 30, 2020