தமிழக திரையுலக வரலாற்றில் தனது உடல் வலிமைக்காகவும் ஆக்சன் காட்சிக்காகவும் ஒரு முத்திரையை பதித்த கதாநாயகன் தான் இவர். இவர் தனது சிறுவயது முதல் தமிழ் திரையுலகில் ஸ்டன்ட்மேனாக அறிமுகமாகி தற்பொழுது ஒரு மிகப்பெரிய கதாநாயகனாக இந்தியாவில் உள்ள அணைத்து மொழி திரையுலகினராலும் பேசப்பட்டு வருபவர். இவர் தனது உடலை மிகவும் கடினமான உடற்பயிற்சிகளின் மூலம் மிகவும் வலிமையாக வெய்த்திருக்கிறார். ப்ரூஸ்லீ யின் ரசிகரான இவர் அவரை போல பல அதிரடி சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் தனது சண்டை திறமைகளை வெளிப்படுத்தி தமிழக மக்கள் மனதில் ஒரு மிகப்பெரிய ஆக்சன் ஹீரோவாக வளம் வந்தார்.

ஆஞ்சநேயரின் பக்தரான இவர் தன்னுடைய உடலையும் ஆஞ்சநேயர் போல கட்டுமஸ்தாக வெய்து கொள்ள பல பயிற்சிகளை மேற்கொண்டு அதில் பலனடைந்தாராம் இந்த கதாநாயகன். தற்பொழுது வெளியாகிய நிபுணன் படமானது இவருக்கு பெரிதளவில் ஹிட் கொடுக்கவில்லை. அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த கதாநாயகி ஸ்ருதி ஹரிஹரன் இவரின் மீது அந்த மாதிரி நடந்து கொண்டார் என  வழக்கு தொடர்ந்துள்ளராம். பல வருடங்களாக தன்னுடைய பெயருக்கு எந்த களங்கமும் ஏற்படாத நிலையில் மக்களிடையே ஒரு நல்ல மனிதராக வளம் வந்த ஆக்சன் கிங் அர்ஜுன் மேல் இப்படி ஒரு வழக்கு வந்துள்ளதை மக்களால் ஏற்று கொள்ள முடியவில்லை.

ஸ்ருதி ஹரிஹரன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் நடிகர் அர்ஜுனுக்கு மனைவியாக நடிக்கும் கதாபாத்திரம் நிபுணன் படத்தில் எனக்கு கிடைத்தது, அதில் நான் அவருடன் ரொமான்ஸ் காட்சிகளில் நெருக்கமாக நடிக்கும் கதையிருந்ததால் நானும் நடித்தேன்.ஆனால் என்னை படப்பிடிப்பு முடிந்த பிறகும் அவர் என்னிடம் நெருக்கமாக வந்து என்னை தொட்டார். அது எனக்கு கோவத்தை ஏற்படுத்தியது என்றும் ஸ்ருதி தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். மேலும் மீண்டும் அதே போல அவர் தொட்டதால் நான் அவரை கண்டிக்கும் வகையில் போலீசில் வழக்கு  அளித்தேன்.

நடிகர் அர்ஜுனின் சொந்தக்காரரான பிரபல தெலுங்கு பட இயக்குனர் ஒருவர் நடிகை ஸ்ருதி மீது ரூபாய் 5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார். தற்பொழுது ஸ்ருதி அளித்த வழக்குக்கு  கோர்டில் இருந்து நிபுணன் பட குழுவினரை நேரில் ஆஜராகும் படி சம்மனை அனுப்பியுள்ளனர். ஆனால் அந்த பட குழுவினர் யாரும் கோர்ட்டுக்கு செள்ளதாதால் இந்த திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல் துறையினர். இந்நிலையில் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here