தற்போது கிட்டத்தட்ட வருடத்திற்கு முன்னூறு திரைப்படங்களுக்கு மேல்  தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படி வெளியாகும்  அனைத்து திரைப்படங்களும் வெற்றியடைகின்றனவா என்று சொன்னால் அப்படியெல்லாம் இல்லை என்றே சொல்ல வேண்டும். சில நேரங்களில் சிறிய பட்ஜெட் திரைபபடங்கள் வெற்றிபெற்றாலும் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் தான் இங்கு நல்ல வரவேற்ப்பை பெருகின்ற்றது. இப்படி தற்போது கிட்டத்தட்ட அடுத்த சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கே வெறும் பெயராலும் மட்டும் உயராலும் வசூலிலும் உயர்ந்து நிற்ப்பவர் நடிகர் தளபதி விஜய்.

கிட்டத்தட்ட கடந்த ஐந்து வருடங்களில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியடைன்தவை. தனது ஆரம்ப காலத்தில் நடித்தது போலவே தற்போது மீண்டும் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வரும் இவர் கடந்த வருடம் நடித்து முடித்து கொரோனா லாக்டவுன் காரணமாக பல மாதங்கள் தள்ளிபோடப்பட்டு கடந்த பதி மூன்றாம் தேதி வெளிவந்தது. தற்போது வரை உலக அளவில் நூற்று ஐம்பது கோடி வசூலை எட்டி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது.

இப்படி இந்த திரைபபடம் வெளிவருவதற்கு முன்பே தளபதி 65 திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்து விட்டது. கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் இந்த திரைப்படத்தினை இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த திரைபப்டத்தினை தயாரிக்க உள்ளது. பலரும் எதிர்பார்க்கும் விதமாக இந்த திரைப்படம் காமெடி பாணியில் அமைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யார் யார் நடிக்க போகிறார்கள் என்ற வதந்திகள் பரவிவந்த நிலையில் நடிகையாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாகவும் மேலும் வில்லனாக பிரபல முன்னணி நடிகர் அருண் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கலக்கியதை போலவே இவரும் பேசப்படுவார் என எதிர்பார்க்கபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here