வெள்ளித்திரையில் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மீது அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை தொடர்ந்து வதந்திகள் வந்த வண்ணம் இருப்பது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் வதந்திகளில் முன்னணி நடிகர் நடிகைகளே இல்லை எனலாம் அதிலும் பெரும்பாலும் வளர்ந்து வரும் இளம் நடிகர் நடிகைகளின் வதந்திகள் வருவது என்பது இயல்பான ஒன்று. அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் புகுந்து ஒரு சில படங்களிலேயே தனது தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் தனக்கென சினிமா வட்டாரத்தில் தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டளாத்தையும் உருவாக்கி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் ஆர்யா.

ஆரம்பத்தில் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் அறிமுகமான இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு மக்கள் மனதில் நீங்கதா ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இளம் நடிகையான சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து திருமணம் முடிந்த பிறகும் இருவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் கூட ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் இணையத்தில் வெளியாகி வேற லெவலில் ஹிட்டாகி வருகிறது.

இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழ்பெண் பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி வைத்து இருந்தார் . அதில் தற்பொழுது வளர்ந்து வரும் தமிழ் நடிகர் மற்றும் இளம் பெண்கள் மனதில் நீங்கா இடம் பெற்று இருக்கும் தமிழ் திரையுலக நாயகனான ஆர்யாவின் மீதான வழக்கு  தான் அது. அதில் அவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி 70 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக கூறப்பட்டிருந்தது.
இதனை அறிந்த ஆர்யா சென்னை காவல் துறையிடம் நேரில் ஆஜராகி அந்த பெண் யாரென்று எனக்கு தெரியவில்லை,அந்த பெண் யாரிடம் ஏமாந்தார் என்று
கண்டு பிடிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

 

இவ்வாறு இருக்கையில் இந்த வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது அதன் மூலம் காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து முகமது அர்மான் மற்றும் முகமது உசேன் ஆகிய 2 பேரை கைது செய்து உள்ளனர் ஜெர்மனிஇல் வாழும் இலங்கை தமிழ்பெண்ணை ஆர்யாவை போல் பேசி பண மோசடி செய்தவர்கள் இவர்கள் என காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ஆர்யா ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பலத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here