தமிழ் சினிமாவில் தற்போது எத்தனையோ பல முன்னணி இயக்குனர்கள் தொடர்ந்து பல நல்ல படங்களை கொடுத்து வருகின்றனர். இருப்பினும் இவர்களுக்கு உதராணமாகவும் மற்றும் தமிழ் சினிமாவில் பல மாறுபட்ட கதையம்சங்களை கொடுத்து மக்கள் மத்தியில் அன்றிலிருந்து இன்று வரை நீங்காத ஒரு இடத்தை பிடித்திருப்பவர் பிரபல முன்னணி இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் அவர்கள். இவரது படங்களுக்கு எப்பொழுதும் மக்களிடையே பலத்த எதிர்ப்பார்ப்பு இருக்கும் எனலாம் காரணம் இவரது படங்கள் பெரும்பாலும் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கபடுவதே இதற்கு முழு முதல் காரணம்.

இந்நிலையில் ஆரம்பகாலத்தில் பல முன்னணி இயக்குனர்களிடையே உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த பாக்கியராஜ் அவர்கள் அப்போதே படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். இப்படி இருக்கையில் கடந்த 1979-ம் ஆண்டு சுவரில்லாத சித்திரம் எனும் படத்தின் மூலம் இயக்குனராக தன்னை திரையுலகில் அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார். சொல்லப்போனால் அந்த காலகட்டத்தில் முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை வைத்திருந்தவர் பாக்கியராஜ் அவர்கள். இவ்வாறு பிரபலமாக இருக்கும் பாக்கியராஜ் அவர்கள் தன்னுடன் ஜோடியாக நடித்த பிரபல நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள் அதில் மகனான சாந்தனு தனது சிறுவயது முதல் படங்களில் நடித்து வருகிறார் மேலும் தற்போது வளர்ந்து கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சாந்தனுவை வைத்து இறுதியாக சித்து +2 எனும் படத்தை இயக்கியிருந்தார் இதனை தொடர்ந்து படங்களை இயக்குவதை தவிர்த்து தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பக்கியாராஜின் மனைவியான நடிகை பூர்ணிமா இவருக்கு இரண்டாவது மனைவி தானாம் முதல் மனைவி பிரபல நடிகை ப்ரவீனாவாம். இவரை தான் முதலில் காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். நடிகை பிரவீனா முதன் முதலில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த மன்மத லீலை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து ரஜினியின் பில்லா படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவ்வளவாக தமிழ் தெரியாத நடிகை ப்ரவீனாவுக்கு பாக்கியராஜ் அவர்கள் தான் ஆரம்பத்தில் தமிழ் கற்று கொடுத்தாராம். இவர் ஆரம்பத்தில் இயக்குனர் ஆவதற்கு கஷ்டப்பட்டு வந்த போது இவருக்கு அறிவுரை கூறி சென்னைக்கு அனுப்பியது ப்ரவீனா தானாம். இதனை தொடர்ந்து சென்னைக்கு வந்த பாக்கியராஜ் அவர்களுக்கு அல்சர் ஏற்பட இவர் சென்னையிலே தங்கி விட்டார் இதன் பின்னர் தான் பிரபல இயக்குனர் பாரதி ராஜா வுடன் இணைந்து 16- வயதினிலே  படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவே அப்படியே செட்டில் ஆகி விட்டார்.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here