தமிழ் சினிமாவில் தற்போது எத்தனையோ பல புதுமுக இயக்குனர்கள் படையெடுத்து வந்த போதிலும் அந்த காலத்தில் நம் கண்களுக்கு படங்களை விருந்தாக கொடுத்த பல முன்னணி இயக்குனர்களை இன்றளவும் நம்மால் மறக்க முடியாது. காரணம் அவர்களின் படங்களை இன்றைக்கு பார்த்தாலும் நாம் மெய்மறந்து போவோம் காரணம் அந்த காலத்தில் நவீன வசதிகள் ஏதும் அதிகமாக இல்லாத காலத்திலேயே நமக்கு பல மாறுப்பட்ட கதையம்சங்கள் கொண்ட படங்களை கொடுத்தவர்கள் அவர்கள்.

அந்த வகையில் 80,90-களின் காலக்கட்டத்தில் பல மாறுப்பட்ட கதையம்சம் கொண்ட இயக்கியதோடு ஹீரோகாமெடியன் குணசித்திரம் என பல கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் இன்றளவும் மிக பிரபலமாக இருப்பவர் பிரபல முன்னணி நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் அவர்கள். இவர் ஆரம்பத்தில் கடந்த 1979-ம ஆண்டு வெளிவந்த சுவரில்லாத சித்திரங்கள் எனும் படத்தின் மூலம் தன்னை தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து சிவாஜி, ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களை வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் இயக்குனரை தொடர்ந்து கதாநாயகனாக தன்னை மேம்படுத்தி கொண்ட பாக்யராஜ் பல படங்களில் ஹீரோவாக நடித்து கலக்கியுள்ளார்.

இவரை பற்றி சினிமா சமபந்தமாக தெரிந்த அளவிற்கு இவரது குடும்பம் மற்றும் வாழ்க்கை பற்றி யாருக்கும் அவ்வளவாக தெரியாது எனலாம். இவர் தனது சக நடிகையான பிரபல முன்னணி நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு சாந்தனு மற்றும் ஒரு மகள் உள்ளார்கள். இந்நிலையில் இவரது மகன் சாந்தனு தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இருப்பினும் பூர்ணிமா இவருக்கு இரண்டவாது மனைவி தானாம் இவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து உள்ளதாம். அந்த முதல் மனைவி வேறு யாரும் இல்லை பிரபல முன்னணி நடிகையான பிரவீனா தான் அவர்.

இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முழு காரணமே பிரவீனா தானாம். இந்நிலையில் அவர் கூறியதை கேட்டு சென்னை வந்த பாக்யராஜ் பிரபல இயக்குனர் பாரதிராஜாவுடன் இணைந்து பதினாறு வயதினிலே படத்தில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 1981-ம் ஆண்டு ப்ரவீனவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இருக்கையில் கல்யாணமாகி இரண்டு வருடங்களே ஆன நிலையில் ப்ரவீனவுக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு தனது 25-வயதிலேயே காலமானார்.

அவர் காலமான ஒரு வருடத்திலேயே தான் பூர்ணிமாவை அடுத்த திருமணம் செய்து கொண்டார். தனது முதல் மனைவி தன்னை பிரிந்த நிலையிலும் அவரது நியாபமாக அவர் கொடுத்த மோதிரத்தை இன்றும் தனது கையில் அணிந்துள்ளராம் பாக்யராஜ். மேலும் அவரது அலுவலகத்தில் அவரது நினைவாக அவரது புகைப்படத்தை வைத்திருப்பதாக பலர் கூறி வருகின்றனர் . இந்நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here