தென்னிந்திய சினிமாவில் பொறுத்தவரை திருமணம் மற்றும் காதல் போன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் மேற்கத்திய பழக்கவழக்கத்தையே பல முன்னணி நடிகர் நடிகைகள் பின்பற்றி வருகிறார்கள் எனலாம். அந்த வகையில் திருமணம் முடிந்து சில காலங்களே ஒன்றாக வாழ்ந்து பின்னர் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பலர் தங்களது திருமண வாழ்க்கையை முடித்து விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருபவர்களும் உண்டு அதைத்தாண்டி வேறு ஒரு திருமணம் செய்து வாழ்ந்து வருபவர்களும் இருக்கிறார்கள். இது புறம் இருக்க சமீபகாலமாக வெள்ளித்திரையில் முன்னணி நடிகர் நடிகைகள் தொடர்ந்து தங்களது இல்லற வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்து விவாகரத்து பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் கூட பிரபல முன்னணி நடிகையான சமந்தா கூட தனது கணவரான நடிகர் நாகசைதான்யவை விவாகரத்து செய்து தற்போது தனித்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவரை தொடர்ந்து தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் போன்ற பல பன்முக திறமைகளை கொண்டதோடு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் இந்திய சினிமாவில் நடித்ததோடு ஹாலிவுட்டிலும் தனது நடிப்பு திறமையால் கால் தடம் பதித்து நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் அவர்களும் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

தனுஷ் அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் மக்களிடையே தன்னை அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தில் இவரை பார்த்த பலரும் இவரெல்லாம் ஹீரோவா என கேலி செய்த நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் தனது நடிப்பு திறமையால் பல வெற்றிப்படங்களை கொடுத்தது தற்போது முன்னணி நடிகர்கள் மத்தியில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளமே உலக அளவில் வைத்துள்ளார். இதனை தொடர்ந்து பல தேசிய விருதுகளையும் பல அவார்டுகளையும் பெற்றுள்ளார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் தனுஷ் அவர்கள் கடந்த 2004 -ம் ஆண்டு பிரபல முன்னணி நடிகரும் சூப்பர் ஸ்டாரும் ஆன ரஜினி அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

ஐஸ்வர்யாவும் இயக்குனராக பல படங்களை இயக்கியும் பல படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில் இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளார்கள் மூத்த மகன் யாத்ரா மற்றும் இளைய மகன் லிங்கா இப்படி இருக்கையில் தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து பெற்று பிரிய போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது குறித்து அந்த அறிக்கையில் தனுஷ், 18 ஆண்டுகளாக நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது. இன்று எங்கள் பாதை பிரியும் கட்டத்தில் நிற்கிறோம். மேலும் நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பர முடிவு செய்துள்ளோம் இதனை தொடர்ந்து இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம்.

தயவு செய்து எங்கள் முடிவை மதித்து இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டு கொள்கிறோம் ஓம் நமசிவாயா அன்பை பகிருங்கள் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதோடு பல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. தனுசின் இந்த நிலைக்கு காரணம் இவர் சிக்கிய சர்ச்சைகள் சுசி லீக்ஸ், ஸ்ருதி ஹாசன் மற்றும் டிடி போன்ற பெண்களுடன் ஆன இவரது தொடர்பே இந்த நிலைக்கு ஆளாகியுள்ளது என தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் இயக்குனராகவும் நல்ல தாயாகவும் இருக்கும் ஐஷ்வர்யா இளம் நடிகருடன் பார்ட்டிக்கு செல்வது ஷனுஷ்க்கு பிடிக்காமல் இருந்தது, மற்றும் அவரை பல முறை கண்டித்தும் இருந்ததாகவும் இது தான் விவாகரத்திற்கு காரணமாக் அமைந்ததாகவும் இணையத்தில் ரசிகர்களால் செய்திகள் பகிரப்பட்டு வருகிறது. இதனால் தான் நடிகர் தனுஷ் முந்திக்கொண்டு விவாகரத்து செய்தியை அறிவித்ததாகவும் கூறப்படுகிறது.

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here