கடந்த வருடம் முதல் பாதியில் பல உச்சபட்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளிவந்து சக்கைபோடு போட்டது. வசூல் ரீதியாக படங்கள் வெற்றி பெற்றாலும் கடந்த ஆண்டு பாதியில் விமர்சனம் ரீதியாக எந்த படமும் பெரிய வெற்றியை பெறவில்லை. இதனை சரிகட்டும் வகையிலோ என்னவோ கடந்த ஆண்டின் இறுதி பகுதியில் வெளிவந்த அணைத்து படங்களும் விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் கடந்த ஆண்டு வெளியான அசுரன் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சக்கைபோடு போட்டது..

கடந்த ஆண்டு வெளியான படங்களிலேயே நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக புதிய உயரத்தை தொட்டது.. இந்த படத்தில் வயதான தோற்றத்தில் தனுஷ் தனது அபரிவிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த படத்திற்காக கண்டிப்பாக சிறந்த நடிகருக்கான விருதை பெறுவார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில்..

பிரபல பத்திரிக்கை நிறுவனம் இந்த ஆண்டிற்க்கான சினிமா விருதுகளை அறிவித்திருந்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்க பட்டநிலையில் நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். இந்த படத்தில் மூன்று குழந்தைகளுக்கு அப்பாவாகவும் இளம் வயதில் துடிப்பான இளைஞனாகவும் நடித்ததற்கு இந்த விருது கொடுத்து பெருமை படுத்துவதாகவும் பத்திரிக்கை நிறுவனம் தெரிவித்து இருந்தது.

அசுரன் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு மட்டுமல்லாமல் சக நடிகர்களுக்கும் இயக்குனருக்கும் விருதுகள் கிடைக்குமென மேலும் ரசிகர்களிடையே எதிர்பார்க்கபடுகிறது.. இருப்பினும் இந்த ஆண்டிற்க்கான தேசிய விருதை இந்த படம் அள்ளிகுவிக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here