தமிழ் சினிமாவில் மிக சிறந்த நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜாவின், மகன் மற்றும் இயக்குனர் செல்வராகவனின் தம்பி ஆவார். இவர் தனது சகோதரர் செல்வராகவனின் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதே இளமை படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் வெற்றியை கண்ட இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ஆடுகளம் படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருது தெனிந்திய சர்வதேச விருது, போன்ற விருதை வென்றார் நடிகர் தனுஷ். அதனை தொடர்ந்து இவர் நடிகர் மட்டுமல்லாமல் பாடல் ஆசிரியராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார்.

மயக்கம் என்ன, 3, மரியான், எதிர் நீச்சல் போன்ற  படங்களில் பாடல் ஆசிரியராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கினர் நடிகர் தனுஷ். 2012 யில் வெளியான 3, திரைபடத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். அந்த படத்தில் இவர் பாடி வெளியான பாடல் பட்டி தொட்டி எங்கும் உலக பெற்றது. இந்த பாடலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார் நடிகர் தனுஷ். அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன், படத்தில் நடித்து அவரது நடிப்பு திறமையை வெளிக்காட்டினர்.

இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றியடைந்து வருகிறது.இந்த வகையில் மாறி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் மக்கள் மத்தியில் பல விமர்சனங்கள் பெற்று வெற்றி அடைந்துள்ளது. நல்ல கதாபாத்திரங்களை தேர்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ்.

அவர் தற்பொழுது தனுஷ் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்தனை தொடர்ந்து டி 43 படத்தில் நடிப்பர் என மக்கள் மத்தியில் எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் இரவு நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நயன்தார, திரிஷா, ஸ்ரேயாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமுகவளைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here