அந்த காலத்தை காட்டிலும் இந்த காலத்தில் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் நட்பாக பழகி வருவதோடு ஒற்றுமையாக இருந்து வருகிறார்கள். அதிலும் பல இளம் நடிகர்கள் படங்களில் இருப்பது போலவே நிஜத்திலும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல இளம் நடிகர்களான விஷ்ணு விஷால், ஜீவா, ஆர்யா, விஷால், ஜெயம் ரவி, ஜெய் போன்றோர் படங்களில் மட்டுமின்றி இயல்பு வாழ்க்கையிலும் சிறந்த நண்பர்களாக இருந்து வருவதோடு படங்களிலும் ஒன்றாக நடிக்கும் அளவிற்கு இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஆர்யாவும் நடிகர் ஜீவாவும் நெருங்கிய நண்பர்கள் இதை நாம் படங்களிலேயே பார்த்து இருப்போம் அந்த நிலையில் இவரது படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் அவரது படத்தில் முக்கிய தோற்றத்தில் வருவது என தங்களது நட்பை வெளிகாட்டி வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜீவா அவரது நண்பர்கள் குறித்த பல நகைச்சுவையான கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளித்துள்ளார். அந்த வகையில் ஜீவா அவர்கள் சிங்கம் புலி படத்தில் வக்கீலாக நடித்திருப்பார் அதேபோல் நீங்கள் வக்கீலாக இருந்தால் யாரையாவது ஒருத்தரை காப்பாற்ற வேண்டும் என வந்தால் நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள் என தொகுப்பாளினி கேட்டுள்ளார்.

அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த ஜீவா அப்படி காப்பாற்ற வேண்டுமென்றால் நான் ஜெய்யை தான் காப்பாற்றுவேன் அவர் தான் அடிக்கடி குடித்துவிட்டு கார் ஓட்டி மாட்டிகொள்கிறார் என நக்கலாக கூறினார். ஆனால் தொகுப்பாளினி அது ஆப்சனில் இல்லையே என கூறி ஜெயம் ரவி, ஆர்யா, விஷால் என இவர்கள் மூவரில் ஒருவரை தான் சொல்லவேண்டும் என கூற உடனே ஜீவா அப்ப ஆர்யா குடிக்க மாட்டான். அப்ப விஷாலாத்தான் கேசில் காப்பாத்தனும் போல கூறி சிரித்தார். மேலும் ஆனால் மூணு பேரும் எந்தெந்த கேசில் மாட்டிகொள்வார்கள் என்று வேணுமானால் சொல்லலாம். அந்த வகையில் ஆர்யா பெண்கள் சம்பந்தப்பட்ட விசயத்தில் மாட்டிகொள்வான்.

அதுபோல் ஆகிவிட்டது தானே என கூறி எதாவது பெண்ணை காப்பாற்ற போய் அங்கு விவகாரத்தில் மாட்டிகொள்வான் என சிரித்துகொண்டே கூறினார். ஜீவா சொன்னது நகைச்சுவையாக இருந்தாலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆர்யா மீது திருமணம் செய்து கொள்வதாக கூறி 70-லட்சத்தை ஏமாற்றி விட்டதாக ஆர்யா மீது ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா எனும் பெண் போலீசில் வழக்கு கொடுத்து இருந்தார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here