தமிழ் சினிமாவில் பொருத்தவரை நடிகர் நடிகைகளுக்கு எளிதில் மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்து விடும் ஆனால் அதையும் தாண்டி மக்களிடையே பிரபலமாவது என்பது அவ்வளவு எளிதல்ல. அந்த வகையில் அந்த படங்களில் குணசித்திர வேடங்களில் நடிக்கும் நடிகர்கள் மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலம் ஆகி விடுகிறார்கள். இந்நிலையில் வில்லன் காமெடி கலந்த வில்லன், காமெடி, செண்டிமெண்ட் அணைத்து கேரக்டரிலும் வேற லெவலில் நடித்து மிரட்டியிருப்பவர் பிரபல முன்னணி நடிகர் ஜான் விஜய் அவர்கள் .

தனது திரைபயணத்தை ரேடியோ ஜாக்கியாக ஆரம்பித்து அதன் பின்னர் பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் தன்னை நடிகராக அடையாளபடுத்தி கொண்டவர். அந்த வகையில் வில்லன் கதாபாத்திரம் என்றால் தனது முரட்டு தனமான நடிப்பால் நம்மை மிரள வைத்திருப்பார். மேலும் அதேபோல் காமெடி என்றால் வேற லெவலில் நகைச்சுவை கேரக்டரில் நடித்து இருப்பார் அந்த வகையில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றாற்போல் தனது பாணியை மாற்றிகொண்டு அதில் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல முன்னணி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரபல நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்புடன் ஓடிகொண்டிருக்கும் சார்பட்டா பரம்பரை படத்தில் கெவின் டாடி எனும் கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் கவர்ந்து இழுத்து உள்ளார். மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு திரையுலகில் பிரபலமாக இருக்கும் ஜான் விஜயின் மனைவி யாரென தெரியுமா அவர் வேறு யாரும் இல்லை பிரபல அரசியல் வாதியின் மகளானா மாதவி இளங்கோவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார் இவர்களது திருமணம் படங்களில் வருவது போல் பல தடைகளுக்கு பின்னர் தான் நடந்தது என பல முறை பேட்டிகளில் கூறியுள்ளார். இந்நிலையில் இதுவரை இவரது குடும்பம் பற்றிய தகவல்கள் வெளிவராமல் இருந்த நிலையில் சமீபத்தில் இவர்களது குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here