தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு நடிப்பிற்கு எடுத்துகாட்டாக முன்னோடியாக விளங்கி வருபவர் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன் அவர்கள். அந்த தனது சிறுவயது முதலே நடித்து வரும் கமல் அவர்கள் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு பல மாறுபட்ட கேரக்டரில் நடித்து மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் தனக்கென தவிர்க்க முடியாத தனி ஒரு இடத்தை இன்றளவும் பிடித்து வைத்துள்ளார். அதிலும் தற்போதும் கதாநாயகனாக நடித்து வரும் கமல் அவர்கள் பல இளம் நடிகர்களுக்கே சவால் விடும் வகையில் ஸ்டன்ட் மற்றும் காதல் காட்சிகளில் பின்னி பெடலெடுத்து வருகிறார்.

இவ்வாறு இருக்கையில் சமீபகாலமாக சினிமாவை விடுத்து அரசியல் பக்கம் கவனம் செலுத்தி வந்த கமல் மக்கள் நீதி மையம் எனும் கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார் இருப்பினும் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக மீண்டும் சினிமா பக்கம் தன் கவனத்தை திருப்பிய கமல் அவர்கள் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபல இளம் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள விக்ரம் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் பிரபல முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற பல முக்கிய முன்னணி பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 20-வயதே ஆன இளம் நடிகையான பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படி இருக்கையில் இந்த தகவல் ஷிவானியின் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தினாலும் பிக்பாஸ் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது எனலாம். காரணம் கமல் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு இறுதி வரை சென்றது மட்டுமின்றி பல மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் பிரபல பிக்பாஸ் புகழ் நடிகர் தர்ஷன். இந்நிலையில் போட்டியின் இறுதியில் கமல் அவர்கள் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கும் படத்தில் தர்ஷனை நடிக்க வைப்பதாக கூறியிருந்தார்.

இவ்வாறு இருக்கையில் அவரை நடிக்க வைக்காமல் சீசன் 4 போட்டியாளரான ஷிவானியை நடிக்க வைப்பதால் ரசிகர்கள் கொந்தளித்து உள்ளனர். இதனால் மிகுந்த மான உளைச்சலுக்கு ஆளான கமல் ஏன்டா இந்த பொண்ணா நடிக்க வச்சோம் எனும் அளவிற்கு புலம்பி வருகிறாராம். இருப்பினும் தர்ஷன் இவரது இயக்கத்தில் நடிக்கவில்லை என்றாலும் பிரபல முன்னணி இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி நடித்து வரும் கூகுள் குட்டப்பன் படத்தின் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த நிகழ்வு இணையத்தில் வெளியாகி பலரது மத்தியில் பல்வேறு விமர்சனங்களை வாங்கி வருகிறது.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here