திரைப்படங்களில் தற்போது பல முன்னணி நடிகர்களின் வாரிசுகள் நடிகர் நடிகைகளாக வலம் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் இதில் பல வாரிசு நடிகர்கள் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளார்கள் இன்னும் பலர் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாத நிலையில் உள்ளார்கள். இந்நிலையில் சமீபத்தில் பிரபல காமெடி நடிகரான வைகைபுயல் வடிவேலு அவர்கள் ஒரு குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது. அந்த குழந்தை யார் என பலர் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த குழந்தை யார் என தெரிய வந்துள்ளது.அந்த காலத்தில் கதாநாயகன், காமெடி நடிகர், குணசித்திர நடிகர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் என பன்முக திறமைகளின் மூலம் மக்களின் மத்தியில் இன்றளவும் நீங்காத இடத்தை பிடித்தவர் பிரபல முன்னணி நடிகர் லிவிங்க்ஸ்டன் அவர்கள்.

இவர் ஆரம்பத்தில் திரைபடங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் 1982-ம் ஆண்டு டார்லிங் டார்லிங் எனும் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக நடித்திருப்பார். மேலும் அந்த படத்திற்கு உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். இதை தொடர்ந்து பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள லிவிங்க்ஸ்டன் 1988-ம் ஆண்டு பிரபல முன்னணி நடிகர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதை தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதன் மூலம் 1996-ம் ஆண்டு வெளிவந்த சுந்தர புருஷன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இன்றளவும் திரைபடங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவருக்கு திருமணமாகி இரு மகள்கள் உள்ளார்கள்.

இவரது மூத்த மகளான ஜோவிதா வேறு யாரும் இல்லை. சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகைதானாம். இவர் தான் வைகைபுயல் வடிவேலு அவர்களுடன் இருக்கும் அந்த அழகிய குழந்தை தற்போது வளர்ந்து தொடர்கள் மற்றும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது சமீபத்திய புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி வைராலாகி வருகிறது.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here