தமிழ் சினிமாவில் இன்றைக்கு எத்தனையோ பல முன்னணி இயக்குனர்கள் இருந்த போதிலும் தனக்கென தனி ஒரு இடத்தை அன்றிலிருந்து இன்று வரை மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை வைத்திருப்பவர் பிரபல முன்னணி இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் ஆவர்கள். இவர் ஆரம்பத்தில் திரையுலகில் உதவி இயக்குனராக தன் திரைபயனத்தை தொடங்கினார் இதன் பின்னர் இயக்குனராக உருமாறி பல வெற்றி படங்களை இயக்கியதோடு மட்டுமில்லாமல் பல படங்களில் பல்வேறு விதமான வித்தியாசமான குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் மற்றும் சினிமா உலகில் பிரபலமானார்.

இவர் இதுவரைக்கும் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளதோடு ஐம்பதுக்கும் மேலான படங்களை இயக்கியும் உள்ளார். இவர் இயக்கிய அணைத்து படங்களும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதோடு சினிமா வட்டாரத்தில் இவருக்கென தனி அங்கீகாரத்தையும் பெற்று கொடுத்தது. மேலும் இவர் இவரது கல்லூரி நண்பரான பிரபல முன்னணி நடிகரான சத்யராஜ் அவர்களை வைத்து பல படங்களை இயக்கியதோடு அவருடன் மாறுபட்ட வேடங்களில் நடித்தும் உள்ளார். மணிவண்ணன் அவர்கள் நடிக்காத கதாபாத்திரமே இல்லை எனலாம் அந்த அளவிற்கு செண்டிமெண்ட், வில்லன், நகைச்சுவை என அணைத்து கேரக்டரிலும் வேற லெவலில் மாஸ் காட்டியுள்ளார்.இவ்வாறு பிரபலமாக இருக்கும் மணிவண்ணன் அவர்கள் செங்கமலம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர்களுக்கு ரகுவண்ணன் எனும் மகனும் ஜோதி மகளும் உள்ளார்கள். இந்நிலையில் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர் உடல்நிலை குறைபாடு காரணமாக சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி வீட்டில் ஓய்வு பெற்றார். இப்படி இருக்கையில் கடந்த 2013-ம் ஆண்டு முதுகு வலிப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக காலமானார். இதனால் தனது கணவரின் மறைவை தாங்க முடியாமல் தொடர்ந்து வருத்தத்தில் இருந்த அவரது மனைவி செங்கமலம் அவர் காலமான இரண்டு மாதத்திலேயே அவருடைய உயிரும் பிரிந்தது.

இந்நிலையில் மணிவண்ணன் அவர்களின் மகனான ரகுவண்ணன் முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் போன்ற படங்களில் நடித்து இருந்த போதும் அவருக்கு திரையுலகில் அவ்வளவாக பிரபலம் கிடைக்கவில்லை. மணிவண்ணன் காலமாவதற்கு முன்னரே மகனுக்கு ஈழபெண்ணுடன் திருமணம் நிச்சயம் பண்ணியிருந்தார் தந்தையின் ஆசைப்படி அவரும் அபி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு ஆத்விக் மற்றும் ஆதித்யன் என இரு மகன்கள் உள்ளார்கள். தற்போது அவர் தனது குடும்பத்துடன் லண்டனில் செட்டில் ஆகி விட்டார் மேலும் தனது தந்தையின் ஆசைப்படி அவர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டு இன்றளவும் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இந்த தகவல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here