தற்போது தமிழ் சினிமாவில் எத்தனையோ பல புதுமுக இளம் நடிகர்கள் வந்த போதிலும் அந்த காலத்தில் நடித்த பல முன்னணி நடிகர்களை இன்றளவும் நம்மால் மறக்கமுடியாது. அதிலும் அந்த காலத்தில் திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட தகுதிகள் இருக்க வேண்டும் மேலும் அவ்வளவு எளிதாக ஹீரோவாக நடித்திட முடியாது. அந்த வகையில் நல்ல நிறம் கட்டுமஸ்தான உடலமைப்பு உயரம் மற்றும் பிரபலம் என பல இருந்த போதிலும் கருமையான நிறம் சாதாரணமான தோற்றம் என இருந்த போதிலும் தனது நடிப்பு திறமையால் மட்டுமே பலரது மனதில் தன்னை ஒரு ஹீரோவாக அடையாளபடுத்தி கொண்டதோடு முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகர் முரளி அவர்கள்.

அந்த காலத்தில் இவரது நடிப்பிற்கு பெண்கள் முதல் பலர் இவரது ரசிகர்களாக இருந்து வந்ததோடு இன்றளவும் பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்துள்ளார். அதிலும் இவர் நடித்த பல படங்கள் இன்றளவும் மக்கள் மத்தியில் பெருமளவில் பார்க்கப்பட்டு வருவதோடு பெரிதளவில் பேசபட்டும் வருகிறது. மேலும் இவர் காமெடி, மாஸ், செண்டிமெண்ட் என பல கேரக்டரில் ஹீரோவாக நடித்து தனது நடிப்பு திறமையால் திரையுலகில் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து திரைப்படங்களில் பிரபலமாக நடித்து வந்த முரளி அவர்கள் கடந்த 2010-ம் ஆண்டு எதிர்பாராதவிதமாக மாரடைப்பு காரணமாக காலமானர். இவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் உறையவைத்தது.

இந்நிலையில் முரளி அவர்களின் மகனான அதர்வா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்கள் மத்தியில் பிரபல நடிகராக பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் முரளி அவர்களுக்கு பல வருடங்களாக டைரி எழுதும் பழக்கம் இருந்துள்ளது இந்த வகையில் அவர் மறைவிற்கு பின்னர் அதை எடுத்து பார்த்த அவரது மனைவியான ஷோபா அதில் பைனான்சியர் திருப்பூர் சுப்பிரமணியம் என்பவரிடம் 17-லட்சம் கடனாக வாங்கி இருப்பதாக கூறித்து வைத்துள்ளார். ஆனால் சுப்ரமணியம் அவர்கள் முரளி அவர்களின் மறைவிற்கு பின்னர் அந்த கடனை திருப்பி கேட்காமல் அந்த பத்திரங்களை கிழித்தும் போட்டு விட்டார்.

இந்நிலையில் இது கூறித்து அறிந்ததும் சுப்பிரமணியத்தை தொலைபேசியில் அழைத்து வீட்டுக்கு வர சொல்லி அந்த 17-லட்சத்தை திருப்பி கொடுத்துள்ளார். ஆனால் சுப்பிரமணியம் அதை வாங்க மறுத்துள்ளார் அதற்கு ஷோபா என் கணவர் யாருக்கும் கடனாளியாக சென்று விடக்கூடாது மேலும் இது என்னுடைய கணவரின் சம்பாத்தியத்தில் வாங்கிய இடத்தை விற்ற பணம்தான் தயவுசெய்து வாங்கிகொள்ளுங்கள் என கூறி கொடுத்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் மனநெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here