நடிகர் விஜயின் தங்கையை மணக்க போகும் அதர்வாவின் தம்பி??உறுதியான திருமணம் !!எப்போ தெரியுமா !!

903

தமிழ் சினிமாவின் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவை கலக்கி வந்தவர் மறைந்த நடிகர் முரளி அவர்கள்.இவர் பல முன்னணி நடிகைகளுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் கோலிவுட் சினிமா துறையில் பல ரசிகர்களின் மனதில் இன்று வரை நீங்கா இடம் பிடித்த நடிகர் ஆவார்.மேலும் இவர் நடித்து வெளியான இதயம் படம் மூலம் இவருக்கு ரசிகர்களை தமிழ் சினிமாவில் குவித்தது.

நடிகர் முரளி அவர்களுக்கு ஷோபா என்பவருடன் திருமணம் முடிந்து தற்போது நடிகர் முரளி அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்து வருகிறார்கள்.மேலும் அதில் ஒரு மகனான அதர்வா வை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.சில படங்களிலே மட்டும் நடித்து இருந்தாலும் இவர் நடித்து பல மக்களின் மத்தியில் வரவேற்பை பெற்றவர்.

மேலும் நடிகர் அதர்வா அவர்களின் தம்பியான ஆகாஷ் அவர்களுக்கு திருமணம் நடக்க விருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.ஆகாஷ் அவர்கள் சிங்கப்பூரில் படித்து வந்துள்ள நிலையில் இவர் காதல் வயப்பட்டுள்ளார்.இவருக்கும் நடிகர் விஜய் அவர்களின் உறவினர் பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது.அவரது பெயர் சினேகா பிரிட்டோ அவர்கள் நடிகர் விஜயின் அத்தை மகள் ஆவர்.

இந்நிலையில் இவர்களது காதலுக்கு இவர்களது வீட்டில் முதலில் சம்மதம் தெரிவிக்கவில்லை.ஏன் என்றால் இவர்கள் இருவரும் வேறு மதம் என்ற காரணம் தான்.ஆனால் ஆகாஷ் மற்றும் சினேகா அவர்கள் தங்களின் காதலில் உறுதியாக இருக்கும் நிலையில் இவர்களுது பெற்றோர்கள் திருமணத்திற்கு அனுமதி அளித்தனர்.மேலும் வருகின்ற டிசம்பர் மாதம் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க விருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் இதனை அறிந்த ரசிகர்கள் இந்த செய்தியை இணையத்தில் பரப்பி வருவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here