தென்னிந்திய சினிமாவில் கடந்த சில மாதங்களாக பல முன்னணி திரை பிரபலங்களும் தங்களது திருமண வாழ்க்கையை முறித்து கொள்ளும்விதமாக தொடர்ந்து விவாகரத்து குறித்து அறிவித்து வருகின்றனர். அதிலும் கடந்த சில மாதங்களாகவே சினிமா வட்டாரம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்ட ஒரு நிகழ்வு என்றால் அது பிரபல முன்னணி நடிகர் நாகசைதன்யா மற்றும் முன்னணி நடிகை சமந்தா அவர்களின் விவாகரத்து குறித்த தகவல் தான் . தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் பிரபல முன்னணி நடிகர் நாகர்ஜூனாவின் மகனான நாகசைதன்யா கடந்த 2009-ம் ஆண்டு தெலுங்கில்

வெளிவந்த ஜோஸ் எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமானர். அந்த படத்தை தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார். இப்படி இருக்கையில் தமிழில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாகசைதன்யா மற்றும் சமந்தா இருவரும் ஜோடியாக நடித்து இருந்தார்கள். இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அது பின்னாளில் காதலாக மாறியது இதையடுத்து இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்ததை அடுத்து கடந்த 2017-ம் ஆண்டு இருவீட்டார் முன்னிலையில் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது .

திருமணத்திற்கு பின்னர் இருவரும் சந்தோசமாக தங்களது குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வந்ததோடு சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வந்தார்கள். இப்படி இருக்கையில் யாரும் எதிர்பாரதவிதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அது இறுதியில் விவாகரத்து வரை சென்றுள்ளது. இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து பல சர்சையான கருத்துகளும் விமர்சனங்களும் தொடர்ந்து இருவர் மீதும் எழுந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் இந்த முடிவால் சில காலம் மன அழுத்தத்தில் இருந்த சமந்தா அதன்பின்னர் தனது நண்பர்களின் உதவியுடன் மீண்டு வந்தது மட்டுமின்றி முன்பை விட படங்களில் வேற லெவலில் நடித்து வருகிறார் . இது ஒரு புறம் இருக்க

மீண்டும் இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என அவரது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் எண்ணி வரும் நிலையில் நாகசைதன்யா விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளபோவதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து கேட்டபோது நாகசைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராக இருப்பதாகவும் மேலும் அவர் திருமணம் செய்து கொள்ளபோவது நடிகை இல்லை எனவும் இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அவரது நட்பு வட்டாரங்கள் கூறி வருகின்றனர் . இந்நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here