தற்போது கொரோனா எனும் தொற்றுநோயின் காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி கிடைக்கும் நிலையில் உள்ளோம் இந்நிலையில் பலரும் தங்களது இயல்பு வாழ்க்கை மற்றும் வேலைகளை தொடர முடியாமல் இருந்து வருகின்றனர். மேலும் திரையுலகிலும் இதே நிலை ஏற்பட்டு அவர்களும் எந்த படபிடிப்பு வேலைகளும் மேற்கொள்ள முடியாமல் பல நடிகர் நடிகைகள் படங்களில் ஏதும் நடிக்க முடியாமல் தவித்து வீடுகளில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் வீடுகளில் இருக்கும் இவர்கள் செய்யும் சேட்டைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை எனலாம் அந்த அளவிற்கு தங்களை மக்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காக போடோஷூட் எனும் பெயரில் இவர்கள் செய்யும் அலைப்பரைகள் சொல்லிமாலாது.

காரணம் படங்களில் நடிக்கும்போதாவது எதோ ஒரு அளவிற்கு தான் மாடர்ன் உடையில் நடித்து வந்தார்கள் ஆனால் இந்த கொரோனா காலத்தில் இவர்கள் போடோஷூட் எனும் பெயரில் அரைகுறை ஆடையில் புகைப்படம் எடுத்து அதை தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு பலவித சர்ச்சைகளை உண்டாக்கி வருகிறார்கள். இந்நிலையில் தமிழ் சினிமா உலகில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாய்ஸ் எனும் படத்தின் மூலம் துணை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரபல நடிகர் நகுல். இவர் வேறு யாரும் இல்லை பிரபல முன்னணி நடிகையான தேவயானியின் தம்பி ஆவார் மேலும் அந்த படத்தில் பருத்து குண்டாக இருந்த இவர் பலவித உருவகேலிக்கு ஆளாகி வந்தார்.

இப்படி இருக்கையில் இதை இழிவாக நினைக்காமல் அதை மாற்றி காட்டியதோடு ஹீரோவாக களம் புகுந்தார் நகுல். இந்நிலையில் இவர் கதாநாயகனாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த வண்ணம் உள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நகுல் கடந்த 2016-ம் ஆண்டு ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இதனை தொடர்ந்து இவர்களுக்கு சமீபத்தில் தான் அழகான பெண் குழந்தை பிறந்தது அதிலும் இவர்களது பிரசவம் அவர்களது வீட்டிலேயே நகுல் முன்னிலையில் வாட்டர் பாத்தில் நடந்தது. இந்த நிகழ்வு அந்த சமயத்தில் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பல சர்ச்சைகளை உண்டாக்கியது.

இது கூறித்து கேட்டபோது பல லட்சம் செலவு செய்து பலவிதமான ஊசிகளை போட்டு கடும் மன அழுத்தத்துக்கு கொண்டு சென்று விடும் இப்படி இருக்கையில் ஒரு சிறந்த மருத்துவரை கொண்டு அவரது வீடுகளில் பார்க்கபடும் பிரசவம் மிகவும் பாதுகாப்பானது. இதுவே நமக்கு அலோபதி மருத்துவமனையில் இருந்து வேசிநேஷில் இருந்து நமக்கான விடுதலை என கூறியிருந்தார். மேலும் அந்த பிரசவ வீடியோவை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டும் இருந்தார். இவ்வாறு அந்த சர்ச்சையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தனது மனைவி குழந்தைக்கு பால்  கொடுக்கும் படியான  போடோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு மக்கள் மத்தியில் பலவிதமான கருத்துகளை வாங்கி வருகிறார்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here