பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மீது கிசுகிசுக்கள் வருவது என்பது அந்த காலம் தொடங்கி இந்தகாலம் வரை தொடர்ந்து ஒரு வழக்கமாக இருந்து கொண்டுதான் வருகிறது. சொல்லப்போனால் இந்த வதந்திகளில் சிக்காத முன்னணி நடிகர் நடிகைகளே இல்லை எனலாம் அந்த அளவிற்கு ரஜினி, கமல் தொடங்கி விஜய் அஜித் வரை பல முன்னணி நடிகர்கள் வதந்திகளில் சிக்கி தவித்து உள்ளனர். மேலும் பல புதுமுக நடிகர் நடிகைகள் ஒரு அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானாலே போதும் அவ்வளவு தான் அவர்கள் இணைத்து வைத்து பல கிசுகிசுக்கள உலா வர ஆரம்பித்து விடும்.

இந்நிலையில் பெரும்பாலும் வதந்திகள் இந்த நடிகருடன் அந்த நடிகை தொடர்பில் உள்ளார் இந்த நடிகை அந்த இயக்குனருடன் நெருக்கமாக உள்ளார் என்பது போல வதிந்திகள் வந்த வண்ணம் இன்றளவும் இருந்து வருகிறது. இப்படி இருக்கையில் அந்த காலம் தொடங்கி இன்றைக்கு வரை எந்த ஒரு வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் சிக்காத ஒரே நடிகர் என்றால் அது நம் பிரபல முன்னணி நடிகரான மாவீரன் நெப்போலியன் அவர்கள் தான்.

ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கிய இவர் இதனை தொடர்ந்து எஜமான் போன்ற படங்களில் வில்லத்தனத்தில் கலக்கி அதன் பின் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பலத்த வரவேற்பை பெற்று கதாநாயனாக தன்னை மக்கள் மத்தியில் அடையாளபடுத்தி கொண்டார். எட்டுபட்டி ராசா படத்தில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார் இவ்வாறு பல வருடங்களாக தனது நடிப்பால் பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் இவர் திரையுலகை தாண்டி அரசியலிலும் தனது சிறப்பான பங்கை ஆற்றி வருகிறார் இருப்பினும் இவர் மீது இன்றைக்கு வரையிலும் எந்த நடிகையுடன் தொடர்பு படுத்தியோ அல்லது வேறு விதமாகவோ எந்த ஒரு வதந்திகளும் கிசுகிசுக்களும் வந்தது கிடையாது. மேலும் அன்றிலிருந்து இன்று வரை உடன் நடிக்கும் நடிகைகளுடன் கண்ணியமாக நடந்து கொள்வார் எனவும் மேலும் இயல்பு வாழ்க்கையிலும் சிறந்த வகையில் வாழ்ந்து வருகிறார்.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here