பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய வதந்திகள் வருவது என்பது இயல்பான ஒன்றுதான் சொல்லப்போனால் இந்த மாதிரி வதந்திகள் மற்றும் கிசுகிசுக்களின் காரணமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் அதிகம் எனலாம். இது ஒரு பக்கம் இருக்க இது மாதிரி நடிகர் நடிகைகளை பற்றி அடிக்கடி சர்ச்சையான வதந்திகளை வெளியிட்டு அதன் மூலம் பல பத்திரிக்கைகளும் பத்திரிக்கையாளர்களும் இணையத்தில் மற்றும் மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொள்கிறார்கள். அந்த வகையில் ஆரம்ப காலத்தில் திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரபல முன்னணி நடிகர் பயில்வான் ரங்கநாதன்.
இவர் படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானதை காட்டிலும் தொடர்ந்து நடிகர் நடிகைகளை பற்றி அவதூறாக பல சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு அதன் மூலம் பிரபலமானது தான் அதிகம். இந்நிலையில் பல முன்னணி நடிகர்கள் நடிகைகளின் அந்தரங்கங்களை வெளிப்படையாக போட்டு உடைத்து வரும் நிலையில் தற்போது நடிகைகளை பற்றிய சர்ச்சையான கருத்தை ஒன்றை பதிவிட்டு சிக்கலில் சிக்கியுள்ளார். அதன்படி தற்போது சினிமாவில் நடிக்கும் நடிகைகள் அனைவரும் சினிமாவில் நடிப்பதற்காக உடல் ரீதியாக அட்ஜஸ்ட் செய்து வருவதாகவும் மேலும் பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி அரைகுறை ஆடையில் மாடர்ன் போடோஷூட் நடத்தி வருவதாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில் அவ்வாறு தங்களது உடலை காட்டி பிரபலமான நடிகைகளின் வரிசையில் அமலாபால், மாளவிகா மோகனன் , ரெஜினா, ராஷ்மிகா, ஷாலினி பாண்டே ஆகியோரை கூறியுள்ளார். மேலும் இவர்களை தொடர்ந்து பிரபல முன்னணி நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த வரலாறு படத்தில் நடித்த கனிகாவும் இதுமாதிரி வந்தவர் என கூறியுள்ளார். நடிகை கனிகா தமிழில் பைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே தன்னை கதாநாயகியாக அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆட்டோகிராப், எதிரி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது சின்னத்திரை சன் டிவி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் உள்ளார். இப்படி ஒரு நிலையில் தன்னை பற்றியும் சினிமாவில் நடிக்கும் மற்ற நடிகைகள் பற்றியும் பயில்வான் ரங்கநாதன் பேசிய வீடியோவை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அதில் பதிவு ஒன்றையும் போட்டுள்ளார்.
அதில் கனிகா இவர் மீது நான் எப்படி வழக்கு அளிக்க முடியும் அவரின் அணைத்து பேச்சுகளும் தகாத முறையில் உள்ளது. இது போன்ற போலி பத்திரிக்கையாளர்கள் கூறும் கருத்துகளை ஒருபோதும் நான் கண்டுகொள்வதில்லை. இருப்பினும் இவர் பேசிய இந்த பேச்சு என்னை மிகுந்த கோபத்துக்கு ஆளாகியுள்ளது ஆனால் இதை நம்பவும் ஒரு கூட்டம் இருக்கிறது என்பதை நினைத்தால் தான் வேதனையாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் கனிகாவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் அவர் இப்படி பேசியிருப்பது அனைவரையும் கோபத்தில் தள்ளியுள்ளது இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.