பொதுவாக சினிமாவில் நடிக்கும் ஹீரோக்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கபடுகிறதோ அதை காட்டிலும் அந்த படத்தில் அவர்களுக்கு எதிராக வில்லனாக நடிக்கும் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கபடுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணசித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் பிரகாஷ் ராஜ்.

சொல்லப்போனால் இவர் நடித்திராத கதாபாத்திரங்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு பல படங்களில் ஹீரோ, வில்லன் , செண்டிமெண்ட், காமெடி என பல மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து இன்றளவும் மக்கள் மத்தியில் மற்றும் சினிமா வட்டாரத்தில் தனக்கென தவிர்க்க முடியாத ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். மேலும் இவர் தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்,கன்னடம் என பல மொழிகளில் திரையுலகையே கலக்கிய நடிகர். இவ்வாறு இருக்கையில் இவர் முதன்முதலில்
கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த டூயட் திரைபடத்தில் அறிமுகம் ஆனவர்.ஹாய் செல்லம் ஐ லவ் யு என்ற வசனத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்.

இவர் நடிகை லலிதா குமாரியை 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், பின்பு இவர் 2009 ஆம் ஆண்டு திருமண வாழ்கையை
முடித்து கொண்டார்.பிறகு 2010 ஆம் ஆண்டு போனி வர்மாவை முறைப்படி திருமணம் செய்து கொண்டார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

11 ஆண்டுகள் கழித்து திருமண நாளன்று  மகனின் வேண்டுகோளுகிணங்க தனது மகனின் முன்னிலையில் மீண்டும் திருமனம் செய்து கொண்டார்
இதனை அவர் சமூக வலைதளங்களில் நாங்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டோம் என்று பிரகாஷ்ராஜ் போஸ்ட் செய்திருக்கிறார்.  இந்நிலையில் தனது அன்பு மகனான வேதாந்த் ஆசைப்படி நாங்கள் இருவரும் இன்றிரவு எங்கள் வீட்டிலேயே மீண்டும் திருமணம் செய்து கொண்டோம் என மகிழ்ச்சி பொங்க தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Prakash Raj (@joinprakashraj)

 

View this post on Instagram

 

A post shared by Prakash Raj (@joinprakashraj)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here