இந்த கொரோனாவை காரணம் காட்டி பொது மக்களும் பலரும் திருமணம் முடித்துவரும் நிலையில் திரை பிரபலங்களும் முக்கிய நட்சத்திரங்களும் தனது திருமணத்தை சத்தமே இல்லாமல் நடத்தி வருகின்றனர். இப்படி தமிழ் சினிமாவிலேயே கடந்த மதத்தில் மூன்றிற்கும் மேற்பட்ட திரைபிரபலங்களின் திருமணங்கள் நடந்து முடிந்துவிட்டன, குறிப்பாக கூறவேண்டுமென்றால் நடிகர் ராணாவின் திருமணம் முக்கிய புள்ளிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு விமர்சியாக நடத்தப்பட்டது, அந்த புகைப்படங்களும் வெளிவந்து இணையத்தில் வைரலாக பரவியது.
இப்படி தமிழ் சினிமாவில் இன்று உச்சபட்ச நடிகராக இருப்பவர் தளபதி விஜய், இவருக்கு தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளிலும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது இபப்டி இவருடன் பைரவா திரைப்படத்தில் நடித்திருந்த ரோஷன் பஷிர் என்ற மலையாள நடிகருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் முடிவடைந்தது. இவர் கடந்த சில வருடங்களாகவே மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். பைரவா திரைப்படத்தில் தமிழ் அறிமுகம் ஆனதன் மூலம் இவருக்கு இங்கும் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.
அதன்படி அதன்பின்பு கமல்ஹாசனுடன் பாபநாசம் திரைப்படத்திலும் நடித்திருந்து தமிழில் முகம் தெரியும் பிரபலமாக மாறி இருந்தார். இப்படி இருக்க இவருக்கு ஃபர்ஸானா என்பவருடன் கடந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது, கொரோனா முடிந்து திருமணம் நடைபெறும் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
திடிரென முக்கிய பிரபலங்களுக்கு மட்டும் திருமண அறிவிப்பை வெளியிட்டு தனது திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்துவிட்டார். மலையாள திரையுலகை சேர்ந்த பலரும் இவருக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க முடியாததால் சமூக வலைதளங்களில் வாழ்த்து செய்தியினை பகிர்ந்தனர் இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.