தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகரான தளபதி விஜய்.இவர் தமிழ் சினிமாவில் ஆரம்பா கால கட்டத்தில் பெரிதும் சினிமாவில் கஷ்டப்பட்டு தற்போது தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்.இவர் படம் வெளியாக போகிறது என்றால் அவரது ரசிகர்கள் அதை திருவிழாவை போல தான் கொண்டாடுவார்கள்.இவர் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படம் ரிலீஸ் காக அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டு இருகிறார்கள்.மேலும் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் இருந்து வந்தாலும் நடிகர் அஜித் மற்றும் தளபதி விஜய் அவர்களுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.

தளபதி விஜய் அவர்களின் நெருங்கிய நண்பரான நடிகர் சஞ்சீவ் அவர்கள் தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் பல படங்களில் துணை நடிகராக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து இருப்பார்.மேலும் இவர்கள் இருவரும் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து இன்று வரை நெருங்கிய நண்பர்களாகவே இருக்கிறார்கள்.மேலும் சஞ்சீவ் அவர்களுடன் நடிகர் விஜய் அவர்கள் அவ்வபோது வீடியோ கால் மூலம் பேசி வருவர் என்பது மக்களுக்கு தெரிந்த ஒன்றே.அதுவும் அண்மையில் நடிகர் விஜய் தனது நண்பர்களுடன் இணைந்து பேசிய வீடியோ வின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வந்தது.

இந்நிலையில் நடிகர் சஞ்சீவ் அவர்கள் ஒரு தனியார் யூடுப் சேனல் ஒன்றில் பேட்டி கொடுக்கும் பொது அவர்கள் தளபதி விஜய் அவர்களை பற்றி கூறியுள்ளார்,அதில் அவர் கூறுகையில் நான் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது விஜயை சந்தித்து விடுவேன்.இதில் எனக்கு கொரோன நோய் எனக்கு வந்துவிட்டதோ என்ற அச்சத்தில் இருந்தேன்,மேலும் எனது மனைவி மற்றும் குழந்தையை நான் அவர்களது அம்மா வீட்டிற்கு அனுப்பி விட்டு என்னை நான் தனிமை படுத்தி கொண்டேன்.

நான் வீட்டில் தனியாக இருக்கும் போது எனது நண்பன் விஜய் எனக்கு கால் செய்து என்னிடம் என்னாச்சு என விசாரித்தான்.நான் எனக்கு கொரோன இருக்குமோ என்ற அச்சத்தில் நான் தனிமை படுத்தி கொண்டேன் என கூறினேன்.மேலும் கொரோன டெஸ்ட் செய்தியா என கேட்டான்? நான் இல்லை என கூறினேன்.பிறகு சாப்பிட்டியா என கேட்டான் நான் இல்லை இனிமேல் தான் சமைக்கணும் என்று கூறினேன்.பதினைந்து நிமிடத்தில் எனக்கு திரும்பவும் விஜயிடம் இருந்து கால் வந்தது.நான் உன் வீட்டிற்கு கீழே தான் இருக்கிறேன்.சாப்பாடு கொண்டு வந்தேன் என கூறினான்.நான் மேலே இருந்து பார்த்து அலைபேசியில் நான் வரவில்லை என்று கூறினேன்.சாப்பாட்டை வாட்ச்மேன் அவரிடம் கொடுத்து விட்டு சென்று விட்டான் என கூறியுள்ளார்.மேலும் இதை பற்றிய அவர் பேசிய வீடியோ வானது தற்போது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here