நடிகர் சந்தானம் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய லொள்ளு சபா என்னும் காமெடி ஷோவின் மூலம் அறிமுகமானவர்.பின்பு படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவின் நாயகன் ஆகிவிட்டார்.இவர் வெள்ளித்திரையில் 2004ஆம் ஆண்டு வெளியான லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடித்த மன்மதன் படத்தில் சிம்புவின் நண்பராக களம் இறங்கினர்.பின்பு படிபடியாக காமெடி நடிகராக படங்களில் நடித்து வந்த இவருக்கு பல ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்தது.

இவர் காமெடியன் ஆகா இவர் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி ஆகிய படங்கள் இவரை தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.அந்த படங்களுக்கு சந்தானம் பல விருதுகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது காமெடியன் ரோல்களில் நடிப்பதை நிறுத்திய சந்தானம் அவர்கள் நாயகனாக களம் இறங்கியுள்ளார்.இவர் கதாநாயகனாக நடித்து வெளியான முதல் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் இந்த படத்தில் இவர் நடித்து மக்கள் மத்தியில் நடிகன் என்ற நல்ல பெயரை வாங்கி தந்தது.

இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்கள்.மேலும் தற்போது நடிகர் சந்தானம் அவர்கள் அவரது ரசிகர் ஒருவரின் தந்தை இறந்துவிட்டார் .அதை அறிந்த சந்தானம் அவர்கள் அவரை நேரில் சென்று ஆறுதல் கூறி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.மேலும் அதில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி ஆகிட்டாரு என ஷாக்காகி அந்த புகைப்படத்தினை பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.