திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளே பெரும்பாலும் மக்கள் மனதில் பிரபலமாக உள்ளார்கள். அதைத்தாண்டி அவர்களுடன் துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் மக்கள் மத்தியில் தெரியாமலேயே போய் விடுகின்றனர். இந்நிலையில் பல துணை நடிகர்கள் என்னதான் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் அவர்கள் பிரபலமடைவதில்லை.இருப்பினும் அந்த காலத்தில் இருந்து இன்றளவும் வரை பல முன்னணி நடிகர்களுடன் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சரத் பாபு. இவர் திரையுலகிற்கு வருவதற்கு பல மேடை நாடங்கங்களில் நடித்து வந்தார். மேலும் இவரது இயற்பெயர் சத்யம் பாபு தீட்சிதுலு. இருப்பினும் நாடகங்களில் இவரது மேடைபெயாரான சரத்பாபு எனும் பெயராலேயே மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

தொடர்ந்து மேடை நாடகங்களில் நடித்து வந்த சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும் அந்த காலத்தில் பிரபல இயக்குனரான கே.பாலசந்தர் அவர்களின் பெரும்பாலான படங்களில் இவர் நடித்து இருப்பார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலமடைய வைத்தது என்னமோ முள்ளும் மலரும் படம் தான்.

அந்த காலத்தில் பல பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்தவர் சரத்பாபு.இவர் பெரும்பாலும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடன் நடித்த படங்கள் அணைத்தும் வெற்றி படமாகவே அமைந்துள்ளது. அண்ணாமலை, வேலைக்காரன், முத்து, பாபா போன்ற பல படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பல வருடங்களாக சினிமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமனதோடு பல விருதுகளையும் வாங்கியுள்ளார்.

இந்நிலையில்கடந்த சில வருடங்களாக  இவர் என்ன ஆனார் என தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது. அந்த காலத்தில் பல பெண்களின் மன்னனாகவும் இரண்டாவது கதாநாயகன் எனும் அளவிற்கு இருந்த சரத்பாபு தற்பொழுது தலையில் முடி எல்லாம் கொட்டி நிறம் மாறி பாரப்பதற்கே சங்கடமான நிலையில் உள்ளார்.  இவரது இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் நம்ம சரத்பாபுவா இது என சோகத்தில் வாயடைத்து போயுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here