தமிழ் சினிமாவில் துணை நடிகராக நடித்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் நடிகர் சரவணன்.இவரது பெயர் மக்கள் மனதில் நீங்க இடம் பிடிக்க காரணமாக இருந்த படமான பருத்தி வீரன் படத்தில் தனது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.மேலும் இவர் 1991 ஆம் ஆண்டு வெளியான வைதேகி வந்தாச்சு என்னும் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பல ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் படிபடியாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது முன்னணி துணை நடிகராக இருந்து வருகிறார்.
இவர் தமிழ் சினிமா பல வெற்றி படங்களில் நடித்து இருந்தாலும் தற்போது அணைத்து மக்கள் மத்தியிலும் பெரிதும் பேசப்பட்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் போட்டியில் பங்கு பெற்று பெரும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.இந்த ஷோவானது தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான் விஜய்டிவி தொகுத்து வழங்கி வந்த நிலையில் இது மக்கள் மத்தியில் சென்றடைய காரணமாக இருந்தது இதில் தொகுப்பாளராக பணியாற்றியவர் தான்.
உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி இந்நிகழ்ச்சியில் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து நான்காவது சீசன் செப்டம்பர் மாதம் ஆரமிக்க போவதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது.மேலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இதில் சினிமா பிரபலங்களை அழைத்து வந்து நூறு நாட்கள் அந்த வீட்டிற்குள் இருக்க வைத்து அதில் யார் அந்த வெற்றிக்கு தகுதியானவர் என மக்களால் முடிவு செய்ய படும்.
அதில் ஒரு போட்டியாளராக களம் இறங்கி மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சரவணன்.இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த வுடன் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்துள்ளது.மேலும் இவர் அண்மையில் நடத்திய போடோஷூட் புகைப்படங்களை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.படு ஸ்டைலாக மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியகினார்.இதை கண்ட ரசிகர்கள் அட நம்ம சித்தப்பாவா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.