வெள்ளித்திரையில் இவரின் பெயரை சொன்னால் தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு அந்த காலகட்டத்தில் இருந்து இன்று வரை சினிமாத்துறையில் பிரபல கதாநாயகன், வில்லன், காமெடி, குணசித்திர வேடங்கள் என இவர் நடித்திராத கதாபாத்திரங்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு திரைபடங்களில் தன் அசாத்திய நடிப்பு திறமையால் மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் நீங்காத இடத்தை பிடித்தவர் பிரபல முன்னணி நடிகர் சத்யராஜ். முதலில் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதின் மூலம் திரையுலகில் நுழைந்த இவர் பின்னர் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.

இந்நிலையில் இவர் முதன் முதலில் தமிழில் கண்ணன் ஒரு கை குழந்தை எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் மேற்கொண்டு கதாநாயகனாக நடித்து வந்தாலும் வேறு படங்களிலும் குணசித்திர வேடங்களிலும் தொடர்ந்து நடித்துதான் வந்தார். சத்யராஜ் மற்றும் கவுண்டமணியும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டால் அந்த படம் வேற லெவலில் இருக்கும். காரணம் இவர்கள் இருவரது நகைச்சுவையான நடிப்பும் பேச்சும் மக்களை பெரிதளவில் ரசிக்க வைத்தது.

தொடர்ந்து நான்கு தலைமுறையாக நடித்து வந்தாலும் இன்றளவும் சினிமாத்துறையில் தனது பிரபலத்தை குறையாமல் பார்த்து வருகிறார். இந்நிலையில் தற்போதைய திரைபடங்களில் பல்வேறு குணசித்திர வேடங்களில் நடித்து வரும் சத்யராஜ் பிரபல இயக்குனர் ராஜாமவுலி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட பாகுபலி திரைபடத்தில் அவர் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் மக்களிடையே வெகு பிரபலத்தை கொடுத்தது. இதை தொடர்ந்து சத்யராஜ் மக்களிடையே புகழின் உச்சிக்கு சென்றார்.

இந்நிலையில் சத்யராஜின் மகன் மற்றும் மகள் யாரென எல்லாருக்கும் தெரிந்த நிலையில் அவரது மனைவி யாரென தெரியாத நிலையில் சமீபத்தில் சத்யராஜ் அவரது மனைவியுடன் இருக்கும் திருமண புகைபடம் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது. சத்யராஜின் மனைவி பெயர் மகேஸ்வரி சுப்பையா.இவரை 1979-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு சிபிராஜ் எனும் மகனும் திவ்யா எனும் மகளும் உள்ளார்கள். இதில் சிபிராஜ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார், மேலும் அவரது மகளான திவ்யா மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த வயதிலும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது நடிப்பு திறமையால் வேற லேவலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here