தமிழ் சினிமாவில் இன்றளவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும் இவர்களுக்கு எல்லாம் ஜாம்பவான் என்றால் அது கவுண்டமணியாக தான்.  அன்றிலிருந்து இன்று வரை இவரது பார்க்க வேண்டாம் கேட்டாலே போதும் அந்த அளவுக்கு சிரிப்பு வரும். கவுண்டமணி மற்றும் செந்தில் அவர்களுக்கு இணையான காமெடி நடிகர்கள் இன்னும் உருவாகவில்லை என்றே சொல்ல வேண்டும்.81-வயதான கவுண்டமணி அவர்களின் இயற்பெயர் சுப்பிரமணியன் கருப்பையா. அதிகளவு படிக்காத இவர் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்.  திரைத்துறையின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக முதலில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இவர் நடித்த முதல் படம் என்றால் அது சர்வர் சுந்தரம். மேலும் எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த பெருமைக்குரியவர்.

இவருக்கு மக்களிடையே அடையாளத்தை பெற்று கொடுத்தது என்னமோ பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான பதினாறு வயதினிலே படம் தான். இந்த படத்தில் காமெடி குணசித்திர வேடத்தில் நடித்திருப்பார். மேலும் இதை தொடர்ந்து நூறுக்கும் மேற்பட்ட காமெடியனாக நடித்துள்ளார் கவுண்டமணி. மேலும் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ள கவுண்டமணி உடனுக்குடன் கவுண்டர் போடுவதில் வல்லவர். இந்நிலையில் இவருக்கு சாந்தி என்பவருடன் 1963-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது மேலும் இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். சமீபத்தில் வயதின் முதிர்ச்சி மற்றும் உடல்நிலை சரியின்மை காரணமாக படங்களில் நடிக்காமல் இருக்கும் கவுண்டமணி இறுதியாக நடித்தது எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, வாய்மை படத்தில் தான்.

இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் இணையத்தில் கவுண்டமணியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது. அதில் கவுண்டமணி மற்றும் ஒரு பெண்மணி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் வேறு யாரும் கிடையாது கவுண்டமணியின் நெருங்கிய தோழரும் பிரபல நடிகருமான சத்யராஜ் அவர்களின் மனைவி மற்றும் மகன் சிபிராஜ் மற்றும் மகளே ஆகும். சத்யராஜ் மற்றும் கவுண்டமணியின் ஜோடி படங்களில் சொல்லவே தேவை இல்லை. இவர்கள் இருவரும் சேர்ந்து விட்டால் அந்த படத்தில் சேட்டைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த அளவிற்கு இவர்களது நடிப்பு மற்றும் காமெடி ஒருவருக்கொருவர் சளைத்தது இல்லை. மேலும் சத்யராஜ் மற்றும் கவுண்டமணியின் ஜோடி இணைத்து பல படங்களில் நடித்துள்ளார்.

இவ்விருவர்களின் ஜோடி படங்கள் அனைத்தும் செம ஹிட் அந்த அளவிற்கு இவர்களது காமிநேசன் படங்களில் பெரிதளவில் பேசப்படும். மேலும் திரைத்துறையை தாண்டி நிஜத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் கவுண்டமணி பற்றி சத்யராஜீற்கு தெரியாத விசயங்களே இல்லை எனலாம். அந்த அளவு இருந்த நிலையில் 2010-ம் ஆண்டு பொள்ளாச்சி மாப்பிள்ளை படமே கவுண்டமணி சத்யராஜ் உடன் இணைந்து நடித்த இறுதி திரைப்படம். இதற்கு ஒரு சில படங்களிலேயே நடித்துள்ள உடல்நிலை குறைவு காரணமாக எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளமால் வீட்டிலேயே உள்ளார். இப்படி இருக்கையில் கவுண்டமணியின் புகைப்படங்கள் இணையத்தில் அவரது ரசிகர்களை உற்சாகபடுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here