தென்னிந்திய தொலைக்காட்சிகளில் வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் தான் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அதுவும் அதில் ஒளிபரப்பாகும்  ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் ஹிந்தியில் ஆரம்பித்து தற்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வெற்றிக்கரமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது எனலாம். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தமிழில் வெளியாகி தமிழ் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.

அந்த வகையில் தற்போது இந்த நிகழ்ச்சி நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது சீசனில் வெற்றிக்கரமாக அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிகழ்ச்சி பிரபலமாவதற்கு காரணம் அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை தாண்டி அதை தொகுத்து வழங்கும் பிரபலங்களும் தான். இந்த நிகழ்ச்சி பல்வேறு மொழிகளில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர். அவ்வாறான நிலையில் தமிழில் வெளியாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தென்னிந்திய சினிமாவின் முன்னணி பிரபலமான உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இவர் தொகுத்து வழங்குகிறார் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தவர்கள் பலர்.  கமல் அவர்களும் அதற்கு ஏற்றாற்போல் அந்த நிகழ்ச்சியை அவரது பாணியில் வெகு சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் நான்காவது சீசன் வெற்றிக்கரமாக முடிவடைந்த நிலையில் அதில்  ஆரி டைட்டில் வின்னராக தேர்தெடுக்கப்பட்டார். இப்படி இருக்கையில் தற்போது ஐந்தாவது சீசன் தொடங்கவுள்ளது. இந்த சீசனை கமல் தொகுத்து வழங்க போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது கூறித்து கேட்டபோது தற்சமயம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கமல் ஹாசன் தனது முழு கவனத்தையும் தேர்தல் மீது செலுத்தியுள்ள நிலையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது என கூறிவிட்டாராம்.

கமல் அவர்களின் மக்கள் நீதி மையம் கட்சி தற்போது அணைத்து தொகுதிகளிலும் போட்டியிடவுள்ள நிலையில் அரசியல் பக்கம் தன் கவனத்தை செலுத்தியுள்ளார்.  இந்நிலையில் ஐந்தாவது சீசனை யார் தொகுத்து வழங்குவார் என அனைவரும் யோசித்து வந்த நிலையில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு அவர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்ற அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினா எப்படி இருக்கும் நினைச்சுகூட பர்க்கமுடில.. ம்ம்ம்ம் வெயிட் பண்ணி பார்க்கலாம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here