தென்னிந்திய சினிமாவில் தற்போது பல முன்னணி நடிகர்களின் வாரிசுகள் தற்போது சினிமாவில் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர் இருப்பினும் இதில் ஒரு சில நடிகர்களே மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பிரபலமாகி தங்களது தந்தை பெயரை கடந்து தனக்கென தனி அடையாளத்தையும் தனி ரசிகர் பட்டளாத்தையும் அமைத்து கொள்கிறார்கள். அந்த வகையில் அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்களின் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை இன்றளவும் வைத்திருப்பதோடு பல படங்களை இயக்கி நடித்தவர் பிரபல முன்னணி நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்திரன் அவர்கள்.

இவருக்கு இன்றளவும் பலர் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள் இந்த நிலையில் இவரது மூத்த மகனும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு அவர்கள். இவர் தனது சிறுவயது முதலே படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருவதோடு தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் தனக்கென தனி ஒரு நீங்காத இடத்தை பிடித்து வைத்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் சிம்பு அவர்களின் மீது வராத வதந்திகளே இல்லை எனலாம் அதிலும் இவர் மீது வந்த கிசுகிசுக்கள் எல்லாம் பெரும்பாலும் காதல் மற்றும் பெண்கள் மீதாக தான் உள்ளது.

இந்நிலையில் இவருக்கு பல வருடங்களாக அவரது தந்தையான ராஜேந்திரன் அவர்கள் பெண் பார்த்து வருகிறார்கள் ஆனால் இதுவரைக்கும் அவருக்கு திருமணம் ஆகவில்லை. இவ்வாறு இருக்கையில் இவரது தம்பியான குறளரசன் தான் காதலித்து வந்த பெண்ணை கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இப்படி இருக்கையில் இவருக்கு பல வருடங்களாக திருமணம் ஆகாமல் இருப்பதை அறிந்த பெண் சாமியார் ஒருவர் அவருக்கு திருமண தோஷம் உள்ளது அவர் என்னிடம் வந்து குறி கேட்டால் தான் அவருக்கு திருமணம் நடக்கும் என கூறி பீதியை கிளப்பியுள்ளார்.

மேலும் அந்த பெண்மணி சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜகுடும்பதில் பிறந்தவர் லட்சுமி அவர்கள் இவர் தனது சிறுவயது முதலே ஆன்மிகத்தில் அதிகம் ஆர்வம் கொண்டு இருப்பதோடு ஐந்து பெரும் சித்தர்களிடம் தீட்சை பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவர் சிம்புவின் திருமணத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளாக இருக்கும் த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா போன்ற நடிகைகள் தெய்வப்பெண்கள் எனவும் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here