பொதுவாகவே வெள்ளித்திரையில் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை பற்றிய வதந்திகள் என்பது வருவது இயல்பான ஒன்றே அது இப்போது மட்டுமல்ல அந்த காலம் தொடங்கியே இந்த வழக்கம் இருந்து வருகிறது. சொல்லபோனால் வதந்திகள் மற்றும் கிசுகிசுக்களில் சிக்காத முன்னணி நடிகர் நடிகைகளே இல்லை எனலாம் அந்த வகையில் ரஜினி கமல் தொடங்கி விஜய் அஜித் வரை பல முன்னணி நடிகர்களும் நடிகைகளும் பல கிசுகிசுக்களில் சிக்கியுள்ளனர். இந்த வகையில் தனது திரைபயனத்தை குழந்தை நட்சத்திரமாக துவங்கி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் சிம்பு.

இவரை பற்றி சொல்லப்போனால் இவரது படங்கள் பற்றி வெளியாகும் தகவல்களை விட இவரை பற்றிய வதந்திகளே அதிகம் அந்த அளவிற்கு பல நடிகைகளுடன் காதல் அது இது என சிம்பு பற்றிய வராத கிசுகிசுக்களே இல்லை எனலாம். இந்த வகையில் சில காலங்களாக படங்களில் ஏதும் நடிக்காமல் இருந்த நிலையில் இவர் மீது எந்த வதந்திகளும் வராமல் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் ஈஸ்வரன் மற்றும் மாநாடு படத்தில் நடித்து மீண்டும் தனது பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளனர். இந்த வகையில் ஈஸ்வரன் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நிதி அகர்வாலும் சிம்புவும் காதலித்து வருவதாக பலதகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தது.

இது எப்போதும் போன்ற ஒரு தகவல் தான் என இருந்த நிலையில் தற்போது இது திருமணம் வரை சென்றுள்ளதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. நிதி அகர்வால் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவந்த பூமி படத்தின் மூலமே தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர் அதன் பின்னர் சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இருவரும் நடித்த முதல் படத்திலேயே காதல் மலர்ந்த நிலையில் அது இப்போது கல்யாணம் வரை சென்றுள்ளது. இருப்பினும் அம்மிணி சமூக வலைதளங்களில் எப்போதும் பிசியாக இருக்கும்பட்சத்தில் அடிக்கடி அரைகுறை உடையில் மாடர்ன் புகைப்படங்களை தாரளமாக வழங்கி வருகிறார்.

ஆனால் சிம்புவின் டிஆர் குடும்பமோ கொஞ்சம் கட்டுகோப்பான குடும்பம் அந்த வகையில் இருவருக்கும் எப்படி செட்டாகும் என பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் நயன்தாரா மற்றும் ஹன்சிகா போல பத்தி வரை சென்று மீண்டும் பழைய நிலைக்கு தான் பொகபோகிறது என தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here