கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வினால் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா தன்னால் மருத்துவம் பயில முடியாமல் மறைந்த செய்தி மாணவர்கள் மத்தியில் மட்டுமின்றி அரசியல் வட்டாரம், சினிமாத்துறை மத்தியிலும் பெரிய வருத்தத்தை ஏற்ப்படுத்தியது. நடிகர் விஜய் அனிதாவின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி வி பிரகாஷ் மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதனால் மேலும் உயிர் பலி ஏற்படக்குடாது என பலரும் நீட் தேர்வை தடை செய்யகோரி  பலரும் போராடிவருகின்றனர் ஆனால் அதற்க்கு எந்த ஒரு தடையும் இன்றி ஆண்டு ஆண்டாக நடைபெற்று வருகிறது. இதற்க்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று பலரும் கூறிவருகின்றனர். இந்நிலையில் பல நடிகர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு மாணவர்களுக்கு உதவிவருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயனும் தஞ்சாவூர் மாவட்டம் பேராவுரணியை அடுத்த பூக்கொல்லை பகுதியை சேர்ந்த மாணவி சஹானாவிற்கு உதவியுள்ளார்.இவர் கஜா புயலில் பதிக்கப்பட்ட பெண்  இவர் மருத்துவம் படிக்க நீட் தேர்வு எழுத சிவகார்த்திகேயன்  தனியார் நீட் பயிற்சி மையத்தில் சஹானாவிர்க்கு அனுமதி பெற்றுத்தந்தார் மேலும் அவருக்கு ஆகும் மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டார்.

இதனால் மாணவி சஹானா நீட் தேர்வில் 273 மதிப்பெண் பெற்று அவருக்கு அரசு இட ஒதிக்கீட்டில்இடம் கிடைத்து திருச்சி அரசு  மருத்துவ கல்லூரியில்  கடந்த நவம்பர் 9 ஆம் தேதியன்று சேர்ந்துள்ளார். இந்நிலையில் அவரின் மருத்துவ படிப்பிற்கு ஆகும் செலவையும் ஏற்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் மாணவி சஹானா தனது மருத்துவ கனவை நனவாக்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here