தென்னிந்திய சினிமாவில் மட்டுமின்றி உலக அளவில் இவரது பெயரை சொன்னால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மக்கள் மனதில் தனக்கென தனி ஒரு கோட்டையை கட்டி வாழ்பவர் பொன்மனசெம்மல் மக்கள் திலகம் என பல்வேறு பட்டங்களால் பலரது மனதில் வாழ்ந்து வரும் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள். இவரை போன்று இன்னொருவர் பிறக்கத்தான் வேண்டும் எனும் அளவிற்கு வெகு பிரபலமடைந்தவர் எம்.ஜி.ஆர் அவர்கள். இவர் ஆரம்பத்தில் பல மேடை நாடகங்களில் நடித்து வந்த நிலையில் சதிலீலாவதி எனும் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இதை தொடர்ந்து தனது நடிப்பு திறமையால் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள இவரின் நடிப்பிற்கு இன்றளவும் ரசிகர் பட்டாளமே உள்ளது என்றால் மிகையாகது.

திரைப்டங்களை தொடர்ந்து மக்களுக்கு நல்லது செய்யும் கதைகளில் நடித்து வரும் இவர் இயல்பு வாழ்க்கையிலும் அவ்வாறே. இதன் மூலம் சினிமாக்களில் நடிப்பதை தொடர்ந்து அரசியலில் களம் புகுந்தார். ஆரம்பத்தில் காந்திய கொள்கைகளால் கவரப்பட்ட எம்.ஜி.ஆர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். இந்நிலையில் தனித்து வெளியே வந்து தனது சொந்த கட்சியை உருவாக்கி அதற்கு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சியை துவங்கினார். இதனை தொடர்ந்து மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்று பல வருடங்களாக நிலையான ஒரு ஆட்சியை நடத்தி வந்தார்.

இவரது ஆட்சியை மக்கள் பெரிதளவில் வரவேற்றதோடு இவர் மீது கடல் கடந்த ஒரு அன்பை கட்டி வந்தனர். இவ்வாறான நிலையில் 1984-ம் ஆண்டு நீரிழிவு நோயின் காரணமாக சீறுநீரக பாதிப்படைந்து நீண்ட காலமாக உடல்நலகுறைவு காரணமாக படுத்த படுகையாக இருந்தவர் 1987-ம் ஆண்டு அவரது ராமவரம் இல்லத்தில் காலமானார். ஒரு நடிகர் மற்றும் அரசியல்வாதியின் மறைவு இவ்வளவு மக்கள் வருவார்கள் என்பதை இவரது மறைவே உலகிற்கு பறைசாற்றியது. அந்த அளவிற்கு இவர் மீது மக்கள் அன்பு வைத்திருந்தனர் இன்றளவும் அந்த அன்பு துளியும் குறையாமல் உள்ளது மக்களிடம் இப்படி ஒரு நிலையில் எம்.ஜி,.ஆர் அவர்களின் பழைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

அதில் அவர் ஒரு குழந்தையை கையில் வைத்துள்ளது போல் உள்ளது அந்த குழந்தை வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூர்யா அவர்கள் தான் உடன் அவரது தந்தையான பிரபல முன்னணி நடிகர் சிவகுமார் அவர்களும் உள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பல்வேறு நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here