தென்னிந்திய திரையுலகில் வாரிசு நடிகர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது எனலாம்.இருப்பினும் பலர் வந்த இடம் தெரியாது போன நிலையில் பல நடிகர்கள் இன்னும் வெள்ளித்திரையில் புகழின் உச்சியிலேயே உள்ளனர்.அந்த வகையில் பிரபு,விக்ரம் பிரபு,சூர்யா,கார்த்திக்,கௌதம் கார்த்திக்,என பல நடிகர்கள் வாரிசு நடிகர்களாக திரைத்துறையில் நுழைந்து தற்போது தங்களுக்கென தனி ஒரு இடத்தை பிடித்துள்ளனர்.அந்த வகையில் தமிழ் திரையுலகில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் இளைய தளபதி விஜய். தற்போது வெளியான மெகாஹிட்டான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் கலக்கி எடுத்திருப்பார்.

அதில் விஜயைப் பார்த்தால் ஏதோ 25 வயது இளைஞன் போல தெரியும். இப்படி இருக்கையில் விஜயின் மகனான சஞ்சய் கதாநாயகனாக நடிக்க உள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற போக்கிரி படத்திலேயே சஞ்சய் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார். இந்நிலையில் இயக்குனருக்கு படித்து வரும் சஞ்சய் தற்போது தெலுங்கில் அறிமுக நடிகர்களின் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் உப்பண்ணா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

தெலுங்கில் உப்பண்ணா திரைப்படம் மூன்று நாட்களில் 50 கோடி வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது.மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு எதிராக வில்லனாக நடித்து மிரட்டிய விஜய் சேதுபதியே உப்பண்ணா திரைப்படத்திலும் வில்லனாக கலக்கியுள்ளார்.ஆக தந்தை மற்றும் மகன் இருவருக்கும் வில்லனாக விஜய் சேதுபதி இருப்பார் போலவே என தோன்றுகிறது.

அதுமட்டும்மல்லாமல் மலையாள சினிமாவில் கொடிகட்டிப்பறந்துகொண்டு இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடிக்கபோவதகவும் இருக்கிறதாம். இருந்தாலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை. விஜய்க்கு இருக்கிற ரசிகர் பட்டாளத்தை தன் நடிப்பால் தன் வசம் கவர்வார என நம்பலாம்.அடுத்த இளைய தளபதி திரையில் பார்ப்பதற்கு தளபதியின் ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள்.புலிக்கு பிறந்தது பூனையாகுமா..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here