தமிழ் சினிமாவில் தற்போது பல இளம் நடிகர்கள் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகின்றனர் இதனை தொடர்ந்து இவர்கள் ஒரு சில படங்களிலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொள்கிறார்கள். இருப்பினும் இந்த காலத்தில் நடிப்பு திறமை இருந்தாலே போதும் எளிதாக சினிமாவில் ஒரு அளவிற்கு ஹீரோவாக வலம் வர முடியும் ஆனால் அந்த காலத்தில் இவ்வாறு இல்லை ஒரு ஹீரோவாக வேண்டும் என்றால் அதற்கு என்று பல தகுதிகள் மற்றும் வரைமுறைகள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

அழகான தோற்றம் உயரம் கட்டுமஸ்தான உடல் மற்றும் நடிப்பு பிரபலம் என பல தகுதிகள் இருந்தது. இந்நிலையில் இது எதுவும் இல்லாமல் கருப்பான நிறம், ஒல்லியான உடல் தோற்றம், இயல்பான அழகு இதனை கொண்டு நடிப்பு திறமையை மட்டுமே பலமாக கொண்டு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானதோடு தற்போது தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்திருப்பவர் தான் பிரபல முன்னணி நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் இவரெல்லாம் ஹீரோவாக என எண்ணி சிரித்தவர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ் சினிமா மட்டுமின்றி ஹாலிவுட் வரை பல படங்களில் மாஸ் காட்டி நடித்து வருகிறார். சமீபகாலமாக இவரது படங்கள் மக்கள் மத்தியில் வேற லெவலில் ஹிட் அடித்து வருகிறது. இதன் காரணமாக பல முன்னணி இயக்குனர்களும் இவரது கால்ஷிட் கேட்டு காத்து கொண்டு இருக்கிறார்கள்.

 

இப்படி இருக்கையில் பல இளம் மற்றும் முன்னணி நடிகைகளுமே இவருடன் ஜோடி போட்டு நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் அவருடன் முதல் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் தன்னை கதாநாயகியாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல பிக்பாஸ் புகழ் நடிகை ஷெரின். இருவருமே துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாகத்தான் அறிமுகமானார்கள் இருப்பினும் தனுஷ் அவர்கள் தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் முதன்மையானவராக வலம் வருகிறார் ஆனால் ஷேரினோ ஒரு சில படங்களில் நடித்த பின் பட வாய்ப்பு ஏதும் இல்லாமல் பரிதவித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தான் பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு இறுதி வரை சென்று மீண்டும் மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொண்டார்.

இப்படி இருக்கையில் இதன் காரணமாக தன்னுடன் முதல் படத்தில் நடித்த நடிகை எனும் காரணத்தால் தற்சமயம் தனுஷ் அவர்கள் ஷெரினுக்கு படங்களில் நடிப்பதற்கு சிபாரிசு செய்து வருகிறார். ஆனால் அம்மினியோ இதையெல்லாம் தொடர்ந்து நான் நடித்தால் மீண்டும் உங்களுடன் ஹீரோயினாகதான் நடிப்பேன் என அடம்பிடித்து வருகிறாராம். இந்த தகவல் அறிந்த தனுஷ் அவர்கள் இது எல்லாம் நடக்கிற காரியமா போய் பொழப்ப பாரும்மா என்பது போல் சிரித்தபடி போய் விட்டாராம். இந்நிலையில் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here