தற்போது தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் புதிதாக வந்து நம்மை சிரிக்கவைத்து வந்தாலும் அந்த காலத்தில் இருந்து இன்றளவு வரை நமது வாழ்க்கையோடு ஒன்றாக காமெடியில் வலம் வருவதோடு மக்கள் மத்தியில் நீங்காத ஒரு இடத்தையும் பலரது மனதில் சிம்ம சொப்பனமாக வாழ்ந்து வருபவர் காமெடி லெஜென்ட் வைகைபுயல் வடிவேலு. ஒரு சில காமெடி நடிகர்கள் என்னதான் சிறப்பாக நடித்தும் சிரிக்க வைக்க முடியாத நிலையில் இவர் தனது உடல் அமைப்பின் மூலமே பலரை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வல்லமை படைத்தவர் தலைவர் வடிவேலு அவர்கள்.

ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா என எண்ணி பல நாட்கள் ஏங்கி வந்த வடிவேலு அவர்களுக்கு பிரபல முன்னணி நடிகர் ராஜ்கிரண் அவர்களின் மூலம் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து கிடைத்த வாய்ப்பை திறம்பட பயன்படுத்தி தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி உலக அளவில் பிரபலமான நகைச்சுவை நடிகராகவும் இணையத்தில் இவரது படங்கள் காமெடி காட்சிகள் இல்லாமல் இல்லை எனும் அளவிற்கு தன்னை அடையாளப்படுத்தி கொண்டுள்ளார். ஒரு காலகட்டத்தில் வடிவேலு இல்லாத படங்களே இல்லை எனும் அளவிற்கு பல படங்களில் பிசியாக நடித்து வந்தார். இப்படி இருக்கையில் காமெடி நடிகனாக வலம் வந்த வடிவேலு ஹீரோவாக களம் புகுந்தார். இதணை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து மக்களிடையே தன்னை கதாநாயகனாக அறிமுகபடுத்தி கொண்டார்.

இந்நிலையில் இவர் நடித்த இம்சை அரசன் 23-ம் ஆம் புலிகேசி படத்தின் இரண்டாவது பாகத்தை பிரபல முன்னணி இயக்குனர் சங்கர் அவர்கள் தயாரிக்க இருந்தார் இந்த வகையில் இயக்குனருக்கும் வடிவேலுக்கும் கருத்து வேறுபாடு இதனால் பல சர்ச்சைகளுக்கு ஆளான வடிவேலு அவர்கள் இனி படங்களில் நடிக்க கூடாது என நடிகர் சங்கம் மற்றும் இயக்குனர்கள் சங்கம் அடித்தளம் போட்டது. இதன் காரணமாக பல வருடங்கள் சினிமாவில் அவ்வளவாக நடிக்காமல் தவிர்த்து இருந்தார் வடிவேலு அவர்கள். இவர் என்னதான் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இவரது காமெடி மற்றும் வசனங்கள் மீம்ஸ் வழியாக இணையத்தில் வெளியாகி வேற லெவலில் உலக அளவில் ட்ரென்ட் ஆனது. இவ்வாறு பிரபலமாக இருக்கும் வடிவேலு மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இப்படி இருக்கையில் வடிவேலு அவர்களை தெரிந்த அளவிற்கு அவரது குடும்பம் பற்றிய எந்த தகவலும் அவ்வளவாக வெளிவரவில்லை. இந்நிலையில் வடிவேலுக்கு அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் கார்த்திகா, கன்னிகா, கலைவாணி எனும் மகள்கள்  உள்ளார்கள். இதில் தனது மகனுக்கு ஏழ்மையான ஒரு வீட்டை திருமணம் செய்து வைத்து தன்னை மேலும் மக்களிடையே பிரபலபடுத்தி கொண்டார் வடிவேலு அவர்கள். இன்னிலையில் மகனின் திருமணத்தை தொடர்ந்து தனது மகளுக்கும் கார்த்திகாவிற்கும்  திருமணத்தை முடித்துள்ளார் வைகைபுயல். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் அவரது மகளின் திருமண விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here