தற்போது சினிமாவில் ஹீரோக்களாக நடிக்க ஆசைபடுபவர்களை காட்டிலும் பெரும்பாலும் வில்லன்களாக நடிக்கவே பல முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பல முன்னணி நடிகர்களும் தொடர்ந்து பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் கவனத்தை தன் பக்கம் கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகில் அந்த காலம் முதல் இந்த காலம் வரை ஹீரோக்களை போலவே வில்லன்களையும் பெரிதும் கொண்டாடி வருகின்றனர். தற்பொழுது வளர்ந்து வரும் நடிகர்கள் அனைவரும் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடிக்க ஆசை படுகின்றனர்.

இதற்கு விதிவிலக்காக இருந்தவர்கள் விஜய்சேதுபதி மற்றும் அருண் விஜய். அருண் விஜய் தனக்கு ஹீரோவாக வாய்ப்பு கிடைக்காத சமயத்தில் வில்லனாக அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டவர் இவர்.விஜய் சேதுபதி ‘விக்ரம் வேதா’, ‘மாஸ்டர் ‘ போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து திரையுலகில் பெரும் சாதனையை படைத்தார்.இவர்கள் இருவரிடம் பத்திரிக்கையாலர்கள் கேட்ட பொழுது ஹீரோவாக நடிப்பதை விட வில்லனாக நடிப்பதற்கே ஆர்வம் அதிகம் உள்ளது என தெரிவித்து உள்ளனர்.

இவர்களை போலவே தானும் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தமிழ் சினிமாவில் வளம் வரும் நடிகரான விதார்த் ஆசை படுகிறார்.அவரது ஆசைக்கு இணங்க
தற்பொழுது நயன்தாரா நடித்து வரும் புதிய திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாராம். நயன்தாரா ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பதை விட சோலோவாக நடிக்க மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்.அவ்வகையில் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நயன்தாரா ஹீரோயின் ஆகவும் விதார்த் வில்லனாகவும் ஒப்பந்தம் ஆகி உள்ளனர்.

விதார்த் ஏற்கனவே நான்கு படங்களில் ஹீரோவாக வாய்ப்பு கிடைத்த பொழுதும் அருண் விஜய் மற்றும் விஜய் சேதுபதி போல் வில்லனாகவும் கதாநாயகநாகவும் மாறி மாறி நடிக்க வேண்டுமென ஆசை படுகிறாராம். இவரை பிழைக்க தெரியாத ஆளென்று சமூக வலைதளங்களில் கிசு கிசுகின்றனர். இந்நிலையில் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here